டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய இந்தியாவிற்கு அடித்தளமிட்டுள்ளது ஜிஎஸ்டி .. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Union Budget 2019 : தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படுமா?- வீடியோ

    டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.

    பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வரும் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் சாமானியர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது.

    GST lays foundation for new India.. Nirmala Sitharaman

    கடந்த அரசில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி புதிய இந்தியாவிற்கு அடித்தளமிட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    பட்ஜெட் 2019: ஒரே நாடு ஒரே மின்விநியோக திட்டம்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! பட்ஜெட் 2019: ஒரே நாடு ஒரே மின்விநியோக திட்டம்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

    உதான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன, சீரமைப்பு செயல்பாடு மாற்றம் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு தேசத்தை வழிநடத்தி செல்லும் முறை சரியானது தான் என்பதை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 27 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. எனவே நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது என்பது சாத்தியம் தான் என்றார்.

    தொழில்துறை சார்ந்த கொள்கை முடிவுகள் உடனுக்குடன் எடுக்கப்படுவதாக கூறினார். மேலும் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்ட வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன், உலகின் 6வது பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் வீடு என்பதே மத்திய அரசின் தாரக மந்திரம் என்றார்.

    இலவச சமையல் எரிவாயு திட்டம் சவுபாக்யா திட்டங்கள் உள்ளிட்டவை ஊரக பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளன என கூறினார். பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்து துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது என்றார்.

    English summary
    Nirmala Sitharaman, who has filed a budget in the Central Budget today, has said that the Union Finance Minister Nirmala Sitharaman is presenting the budget....
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X