LIVE
குஜராத் & இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் LIVE : குஜராத் வாக்கு எண்ணிக்கை நிறைவு - 156 இடங்களில் பாஜக வெற்றி

குஜராத் & இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் LIVE : குஜராத் வாக்கு எண்ணிக்கை நிறைவு - 156 இடங்களில் பாஜக வெற்றி

குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவுமொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 156 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும் சுயேட்சைகள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் டிசம்பர் 1-ந் தேதி 89 தொகுதிகளிலும் டிசம்பர் 5-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றன.

குஜராத் தேர்தல் களத்தில் பாஜக- காங்கிரஸ்- ஆம் ஆத்மி ஆகியவை பிரதானமாக போட்டியிட்ட கட்சிகள். மொத்தம் 833 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

12:00 AM
Dec 9, 2022

குஜராத்: அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

11:59 PM
Dec 8, 2022

குஜராத்: குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

11:03 PM
Dec 8, 2022

2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வியத்தகு மாற்றங்கள்

9:45 PM
Dec 8, 2022

ஹிமாச்சல பிரதேசம் - முன்னணி அரசியல் கட்சிகளின் வெற்றி வரைபடம்

9:44 PM
Dec 8, 2022
வீரபத்ர சிங் குடும்பத்திலிருந்து இமாச்சல் முதல்வர்?

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள், முடிவு கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்கப்படும். நான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கிறேன் என்று நான் கூறவில்லை ஆனால் மறைந்த வீரபத்ர சிங்கின் பெயரில் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளோம். அவரையும் அவரது குடும்பத்தினரையும் புறக்கணிக்க முடியாது - ஹிமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா வீரபத்ர சிங் பேட்டி

9:37 PM
Dec 8, 2022

குஜராத் மக்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டின் லட்சியங்களுக்காகவும், மாநில மக்களின் உரிமைகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் - ராகுல் காந்தி ட்வீட்

9:36 PM
Dec 8, 2022
பாஜக Vs காங்கிரஸ்

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் 2022

9:14 PM
Dec 8, 2022

2022 சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வாக்குப் பங்கு ஹிமாச்சலப் பிரதேசம்

9:01 PM
Dec 8, 2022
சிம்லாவில் தங்கும் தங்கும் காங். எம்.எல்.ஏ.க்கள்

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிம்லா மட்டுமே தங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் பூபேஷ் பாகேல், பூபிந்தர் ஹூடா மற்றும் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நாளை சிம்லாவில் எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளனர்.

9:01 PM
Dec 8, 2022
பாஜக முக்கிய தலைவர் ஆலோசனை

பாஜக தலைமையகத்தில் குஜராத், இமச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை. பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் பிற தலைவர்கள் முக்கிய ஆலோசனை

7:35 PM
Dec 8, 2022

தன் கோட்டையான குஜராத்தில் ரெக்கார்ட் அடித்து சாதனை படைத்த பாஜக

7:35 PM
Dec 8, 2022
தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - பிரதமர் மோடி

பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கியதன் மூலம் குஜராத் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி பேச்சு

7:22 PM
Dec 8, 2022

இமாச்சல் பிரதேசம் : பாஜகவை வீழ்த்த தீயாய் வேலை செய்த ப்ரியங்கா காந்தி

7:20 PM
Dec 8, 2022
இமாச்சலப் பிரதேச முதல்வர் ராஜினாமா

இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கரிடம் வழங்கினார். காங்கிரஸிடம் பாஜக ஆட்சியை இழந்த நிலையில் ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா செய்துள்ளார்.

7:19 PM
Dec 8, 2022

Himachal Pradesh Election Result | BJP ஆட்சியை Congress-க்கு கொடுத்த ஆப்பிள் விவசாயிகள்

6:40 PM
Dec 8, 2022
ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக உயர்ந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உயர்ந்து விட்டதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சியாக இருந்தது. இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது 2 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. தற்போது தேசிய கட்சியாக மாறியுள்ளது - ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்

6:40 PM
Dec 8, 2022

Gujarat Election Result | Kushboo Speech | Rahul Gandhi-யின் நடைபயணம் Waste

6:39 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
ஃபதேபூர்
பவானி சிங் பதானியா
காங்கிரஸ்
கிரிபால் சிங் பர்மர்
சுயேட்சை
Vs
இமாச்சல பிரதேசம் : ஃபதேபூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பாஜக அதிருப்தியாளர் கிரிபால் சிங் தோல்வியடைந்தார். இவர் பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட பிறகும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இப்போது ஃபதேபூர் தொகுதியில் காங்கிரஸின் பாவனி சிங் வெற்றி பெற்றுள்ளார்.
6:38 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
டல்ஹவுசி
டி எஸ் தாக்கூர்
பாஜக
ஆஷா குமாரி
காங்கிரஸ்
Vs
இமாச்சல பிரதேசம் : 6 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஆஷா குமாரிக்கு இமாச்சல பிரதேசத்தின் டல்ஹவுசி தொகுதியில் அதிர்ச்சி தோல்வி. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டிஎஸ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.
6:37 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
மெஹமதாபாத்
அர்ஜுன்சிங் சவுகான்
பாஜக
ஜுவன்சிங் கடாபாய்
காங்கிரஸ்
Vs
குஜராத் : காங்கிரஸ் வேட்பாளர் ஜுவன்சிங் கடாபாயை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் அர்ஜுன்சிங் சவுகான் வெற்றி பெற்றார்.
6:36 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
வாவ்
ஜெனிபென் தாக்கூர்
காங்கிரஸ்
ஸ்வரூப்ஜி தாக்கூர்
பாஜக
Vs
குஜராத் : காங்கிரஸ் கட்சியின் ஜெனிபென் தாக்கூர் மற்றும் பாஜகவின் ஸ்வரூப்ஜி தாக்கூர் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஜெனிபென் தாக்கூர் வெற்றி பெற்றார்.
5:38 PM
Dec 8, 2022

ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் 2022 முடிவுகள்

5:36 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
கம்பாத்
சிராக் அரவிந்த்பாய் படேல்
காங்கிரஸ்
மகேஷ்பாய் ராவல்
பாஜக
Vs
குஜராத் : காங்கிரஸ் வேட்பாளர் சிராக் அரவிந்த்பாய் படேல், பாஜகவின் மகேஷ்பாய் ராவலை தோற்கடித்தார்.
5:36 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
பாவ்நகர் கிராமம்
பர்ஷோத்தம்பாய் சோலங்கி
பாஜக
ரேவத்சிங் கோஹில்
காங்கிரஸ்
Vs
குஜராத் : பாவ்நகர் ரூரல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்ஷோத்தம்பாய் சோலங்கி காங்கிரஸின் கோஹில் ரேவத்சிங்கை வீழ்த்தினார்.
5:36 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
பாவ்நகர் மேற்கு
ஜிதேந்திர வகானி
பாஜக
கிஷோர்சிங் கும்பாஜி கோஹில்
காங்கிரஸ்
Vs
குஜராத் : பாவ்நகர் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட குஜராத் கல்வித் துறை அமைச்சர் ஜிது வகானி வெற்றி பெற்றுள்ளார்.
5:18 PM
Dec 8, 2022

குஜராத் தேர்தல் வெற்றி- பிரதமர் மோடி வாழ்த்து

5:15 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
சோம்நாத்
விமல் சுடாஸ்மா
காங்கிரஸ்
மன்சிங் பர்மர்
பாஜக
Vs
குஜராத் : காங்கிரஸ் வேட்பாளர் விமல், பாஜக வேட்பாளர் மான்சின் பர்மாரை தோற்கடித்தார்.
5:14 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
போர்பந்தர்
அர்ஜுன் மோத்வாடியா
காங்கிரஸ்
பாபுபாய் போக்கிரியா
பாஜக
Vs
குஜராத் : போர்பந்தர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், காங்கிரசின் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
5:14 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
வதோதரா நகரம்
மனிஷாபென் வக்கீல்
பாஜக
குன்வந்தராய் பர்மர்
காங்கிரஸ்
Vs
குஜராத் : பாஜகவின் மனிஷா வக்கீல் காங்கிரஸின் குன்வந்த்ரே பர்மாரை வீழ்த்தினார்.
5:13 PM
Dec 8, 2022
நேருக்கு நேர்
வட்கம்
ஜிக்னேஷ் மேவானி
காங்கிரஸ்
மணிபாய் ஜெதாபாய் வகேலா
பாஜக
Vs
குஜராத் : குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஜிக்னேஷ் மேவானி வட்காம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
READ MORE

Gujarat and Himachal Pradesh Election Results 2022 LIVE News Updates and Highlights in Tamil