டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஜராத்தில் வெளிச்சத்திற்கு வந்த மாபெரும் மோசடி! 14 லட்சம் கொடுத்தால் IELTS டாப் மார்க்! பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநிலத்தில் மாபெரும் மோசடி ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    IELTS Exam | மோசடி செய்த குஜராத் இளைஞர்கள்..

    அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்து செல்வோர் IELTS எனப்படும் International English Language Testing System என்ற தேர்வை எழுத வேண்டும்.

    ஆங்கிலம் பேசும் நாடுகளில் அங்குள்ளவர்களுடன் பேசும் அளவுக்காவது குறைந்தபட்ச ஆங்கிலத்தைத் தெரிந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    இருக்குற தலைவலி போதாதுன்னு.. எடப்பாடிக்கு இருக்குற தலைவலி போதாதுன்னு.. எடப்பாடிக்கு

     குஜராத் இளைஞர்கள்

    குஜராத் இளைஞர்கள்

    கடந்த மார்ச் மாதம் கனடா நாட்டில் இருந்து நதியின் வழியாகச் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாக 6 பேரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கூட தெரியவில்லை. இவர்கள் எப்படி IELTS தேர்வை பாஸ் செய்தார்கள் என நீதிபதியே கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விசாரணை நடத்த மும்பையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் குஜராத் போலீசாரை கேட்டுக் கொண்டு இருந்தது.

     முதற்கட்ட விசாரணை

    முதற்கட்ட விசாரணை

    முதற்கட்ட விசாரணையில் போலீசார் சில முக்கிய தகவல்களைக் கண்டறிந்தனர். அமெரிக்காவில் சிக்கிய அந்த குஜராத் மாணவர்கள் அங்குள்ள நவ்சாரி பகுதியில் IELTS தேர்வு எழுதியவர்கள். தேர்வு நேரங்களில் சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த கோச்சிங் சென்டர் உரிமையாளர்களிடமும் போலீசார் விாரணை நடத்தினர்.

     கோச்சிங் மையங்கள்

    கோச்சிங் மையங்கள்

    மொத்தம் 7 கோச்சிங் மையங்கள் போலீசார் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. இந்த கோச்சிங் சென்டர்களில் பயின்றவர்கள் தேர்வில் முறைகேடு செய்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 950 பேர் இப்படி மோசடி செய்து இந்த கோச்சிங் சென்டர் மூலம் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். ஒவ்வொரு மாணவர்களும் இதற்காக கோச்சிங் நிறுவனத்திற்கு தலா ரூ.14 லட்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

     சிசிடிவி

    சிசிடிவி

    இந்த மாணவர்கள் அனைவரும் இப்போது அமெரிக்கா அல்லது கனடாவில் உள்ளனர். ராஜ்கோட், வதோதரா, மெஹ்சானா, அகமதாபாத், நவ்சாரி, நாடியாட் மற்றும் ஆனந்த் ஆகிய இடங்களில் உள்ள IELTS மையங்கள் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. இந்த விதிமீறல் கடந்த ஏப்ரல் மாதமே முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது தேர்வெழுத வந்த ஒரு போலி மாணவர் பிடிபட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து நவ்சாரி மற்றும் மெஹ்சானா மையங்களில் தேர்வு சமயத்தில் சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

     15 லட்ச ரூபாய்

    15 லட்ச ரூபாய்

    குஜராத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரே இந்த மோசடியை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மற்றும் கனடா ஆர்வலர்களுக்குப் போலியான ஐஇஎல்டிஎஸ் சான்றிதழ்களை வழங்கும் இந்த மோசடி சுமார் ஐந்து ஆண்டுகளாக நடந்து வருவதாக போலீசார் கூறுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்து 13 முதல் 15 லட்ச ரூபாயை வசூலித்து உள்ளனர். வரும் நாட்களில் இந்த விவகாரத்தில் மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அமெரிக்காவின் அக்வெசாஸ்னேவில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஆற்றில் வழியே அமெரிக்கா நுழைய முயன்ற அவர்கள் அனைவரும் 19 முதல் 21 வயதானவர்கள் ஆவர். அவர்கள் IELTS தேர்வில் 6.5- 7 மதிப்பெண்களைப் பெற்று இருந்தும் கூட நீதிமன்றத்தில் அவர்களால் அடிப்படை ஆங்கிலம் கூட ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை. அங்கு இருந்து தான் இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

     முதல்முறை இல்லை

    முதல்முறை இல்லை

    அதேநேரம் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வது இது முதல்முறை இல்லை. கடந்த மாதம் தான், சுமார் 700 இந்தியர்கள் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து தங்கள் நாட்டிற்குள் வந்து இருந்ததாக ஆஸ்திரேலேயி உள் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

    English summary
    Gujarat youths failed to speak basic english in USA: (அமெரிக்காவில் சிக்கிய குஜராத் மாணவர்கள் போலி சான்றிதழ் மோசடி) Gujarat IELTS Exam False Marks scam latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X