கவுகாத்தி ஏர்போர்ட் புதிய முனையத்தில் சேவை தொடக்கம்.. வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு மேஜர் பூஸ்ட்
கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள விமான நிலையம் வேகமாக வளரும் நிலையங்களில் ஒன்றாகும். இது ஆண்டுக்கு ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாள்கிறது. 21 உள்நாட்டு நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி லோகப்பிரியா கோபிநாத் பர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நேற்று முதல் தனது கமர்ஷியல் ரீதியான பணிகள் புதிய முனையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அசாமின் விமானப் பயணத் திறன் இதனால் கணிசமாக உயர்ந்தது. வடகிழக்கு இந்தியாவுக்கான இணைப்பும் மேம்பட்டது.

ஆண்டுக்கு 13.1 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இது வடகிழக்கு இந்தியாவின் முக்கிய விமான நுழைவாயிலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதை 2025 டிசம்பர் 20 அன்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு சேவை தொடங்கியுள்ளது. தொடக்க நிகழ்வில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்றார்.
அதானி விமான நிலைய ஹோல்டிங்ஸ் இயக்குநர் ஜீத் அதானியும் உடன் இருந்தார். விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். முதலில் புறப்படும் பயணிக்கு போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது. மும்பையிலிருந்து வந்த ஆகாசா ஏர் விமானம் இங்கு தரையிறங்கியது. அசாமின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பாரம்பரிய விழாக்கள் அங்கு சிறப்புடன் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "இந்த புதிய முனையம் அசாமின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் திறனை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்" என்றார். அதானி குழுமம் ₹50,000 கோடி முதலீட்டை உறுதிசெய்ததை பாராட்டினார். இந்த மேம்பட்ட வசதி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இது பிராந்திய இணைப்பையும் அதிகரிக்கச் செய்யும்.
வடகிழக்கு இந்திய பிராந்தியத்தில் வான்வழிப் பயணத்திற்கான தேவை தொடர்ந்து உயர்ந்துள்ளது என்று ஜீத் அதானி கூறினார். எதிர்கால உள்கட்டமைப்பு குறித்த தொலைநோக்குடன் விரிவாக்கம் இணைகிறது. அசாம், வடகிழக்கு பிராந்தியத்திற்கு இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். மேம்பட்ட இணைப்பு, பிராந்திய வளர்ச்சிக்கு உதவும்.
அசாம் தலைந்கர் கவுகாத்தியில் உள்ள விமான நிலையம் வேகமாக வளரும் நிலையங்களில் ஒன்றாகும். இது ஆண்டுக்கு ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாள்கிறது. 21 உள்நாட்டு நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாங்காக், பாரோ, சிங்கப்பூர் என மூன்று சர்வதேச நகரங்களுக்கும் சேவை உண்டு. தினமும் 130க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த திறன் கூடுதல் வழித்தடங்களை உருவாக்கும்.
புதிய முனையத்தில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளன. Digi Yatra போன்ற அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவை பயணிகளின் வசதியை மேம்படுத்துகின்றன. மையப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன. புதிய முனையத்தில் சில்லறை விற்பனை கடைகள் படிப்படியாக திறக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கின் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில். கட்டிடக்கலை உள்ளது. அசாமின் 'கோபூ பூல்' அமைப்பு பாரம்பரிய மூங்கில் கைவினைத்திறனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 140 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மூங்கில் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. . அசாம், அருணாச்சல பிரதேச வடிவமைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
அதானி விமான நிலைய ஹோல்டிங்ஸ் துணை நிறுவனத்தால் இந்த முனையம் நிர்வகிக்கப்படுகிறது. புதிய முனையத்தால் அசாம், வடகிழக்கு பிராந்திய இணைப்பு மேம்படும். சுற்றுலாவை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். புதிய முனையம் இந்தியாவின் விமானப் போக்குவரத்து விரிவாக்கத்தில் முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications