பென்ஷன்.. ஓய்வூதிதாரர்களுக்கு டபுள் ஹேப்பி.. குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும்.. மத்திய அரசு உறுதி
டெல்லி: பென்சன் வாங்குவோருக்கு, ஒரு நம்பிக்கை தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதுகுறிது கூறியிருப்பது என்ன?
நம்முடைய நாட்டை பொறுத்தவரை, வயதானவர்களின் பணப்பாதுகாப்பில் மத்திய அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது.. இதற்கான ஏராளமான பல்வேறு பென்ஷன் திட்டங்களை அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறது..

ஓய்வூதியதாரர்: அதுமட்டுமல்லாமல், பென்சன் வாங்குவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைளை தீர்ப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது. அதனால்தான், ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு முகாம்களையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்புகூட, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் குடும்ப ஓய்வூதிய குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சில நாட்களுக்கு முன்பு துவங்கி வைத்திருந்தார்.
பிரதமர் மோடி: அப்போது அமைச்சர் பேசும்போது, "60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் கணிசமான எண்ணிக்கையை புறக்கணிக்க முடியாது.. ஓய்வூதியம் சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்குகிறது, இதனால் அவர்கள் கண்ணியத்துடன் வாழ அதிகாரம் அளிக்கிறது.. எளிதாக ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் ஓய்வூதியதாரர்களைக் கௌரவிப்பது நமது கடமை.. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி மிகவும் உணர்திறனுடன் முடிவுகளை எடுத்துள்ளார்" என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பென்ஷன்தாரர்கள் நலன் குறித்து, பல்வேறு விவரங்களை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.. அவர் சொல்லும்போது, "கடந்த 7 ஆண்டுகளில் ஓய்வூதிய முகாம்கள் மூலமாக 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 10 ஓய்வூதிய முகாம்கள் நடத்தப்பட்டு, மொத்தம் 24,926 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.. அதில், 1,7760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
பென்ஷன்: அதேபோல, தாமதமான ஓய்வூதிய வழக்குகள், குடும்ப ஓய்வூதிய வழக்குகள் குறித்த ஓய்வூதிய முகாம் கடந்த வருடம் நடத்தப்பட்டிருக்கின்றன.. பென்சன்தாரர்களை பொறுத்தவரை, அவர்களின் குறைகளை தீர்க்க அரசு தரப்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்
வேலைவாய்ப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை தந்து வருகிறது. அதனால்தான், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் பிரதமர் மோடி தற்போது உத்தரவிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டில், வேலைவாய்ப்பு திருவிழா தொடங்கப்பட்டதுடன், காலிபணியிடங்களும்.. நிரப்பப்பட்டுள்ளன" என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்..
முகாம்கள்: ஓய்வூதிய முகாம்கள் மூலமாக 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், பென்சன்தாரர்களின் குறைகளை தீர்க்க அரசு தரப்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள இந்த இரட்டிப்பு தகவலானது மிகுந்த மகிழ்ச்சியை ஓய்வூதியதாரர் தரப்பில் ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே, இபிஎஸ்-95 என்ஏசி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு இலவச சுகாதார வசதிகளும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுவாகி உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்து முன்பை விட அதிக ஓய்வூதியக் கோரிக்கையை நிறைவேற்ற தங்கள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததாக அஷோக் ராவத் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications