Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வணக்கம்.. எல்.முருகன் வீட்டில் தமிழில் முழங்கிய மோடி.. தட்டில் ஆரத்தி காண்பித்து பொங்கல் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று டெல்லியில் எல்,. முருகன் இல்ல பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லம் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் இந்த பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார். 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

L Murugan Pongal Celebration PM Modi Nainar Nagendran

பிரதமர் மோடி பங்கேற்பு

அந்தவகையில் நாளை பெரும் பொங்கல் பண்டிகை என்பதால் அன்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடி வருகிறார்

கடந்த ஆண்டு டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்... கடந்த 2024ல் டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அந்தவகையில் இன்றைய தின பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பங்கேற்று மண்பானையில் பொங்கலிடும் நிகழ்வை பார்வையிட்டுள்ளார்..

பாரம்பரிய உணவு பரிமாற்றம்

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.. இந்த விழாவில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்றைய தினமே சென்னையில் இருந்து டெல்லி வந்துவிட்டார்..

அதேபோல டெல்லியில் வாழும் தமிழர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பொங்கல் மரபுகளை நேரில் கண்டு களித்து வருகிறார்கள்..பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுவதுடன் விவசாயிகளின் உழைப்பை போற்றும் கருத்துகளும் எடுத்துரைக்கப்பட உள்ளன..

தேசிய அளவில் ஈர்ப்பு

இன்று பொங்கல் விழா என்பதால் எல்.முருகனின் இல்லம் கரும்பு, மஞ்சள், வாழை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழக கிராமிய மணம் கமழும் வகையில் தயாராகி உள்ளது..

தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இன்றைய பொங்கல் விழா தமிழர் பண்பாட்டையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...

ஜிவி பிரகாஷ், கலா, குஷ்பு, சரத்குமார்

பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்ங.. பிறகு இந்த கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்து, விழாவில் உரையாற்றினார்.. தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி பேசிய மோடி, வணக்கம் சொல்லியும் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்... முருகன் வீட்டு பொங்கல் விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடன அமைப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்... மேலும் பராசக்தி படக்குழுவினரும பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீதிபதிகள், பல உயர் அதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், குஷ்பு, சரத்குமார், உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

மொத்தத்தில் இன்றைய தினம் நடைபெறும் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழா, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+