செத்தவங்க திரும்பி வரவா போறாங்க.. ஹரியானா முதல்வரின் அதிர்ச்சிப் பேச்சு!
டெல்லி: கொரோனாவுக்குப் பலியானவர்கள் குறித்து கவலைப்பட இப்போது நேரமில்லை. செத்துப் போனவங்க திரும்பி வரப் போவதில்லை. எனவே அதைப் பற்றிக் கவலைப்பட நமக்கு இப்போது அவசியமில்லை என்று பேசியுள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.
இறந்து போனவர்கள் குறித்துப் பயன் இல்லை என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. செய்தியாளர்கள் அவரிடம், கொரோனா மரணங்கள் குறித்து அரசு தரும் தகவலுக்கும், உண்மை நிலவரத்துக்கும் நிறைய முரண்பாடு இருப்பதாக செய்தியாளர்கள் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது உள்ள நிலையில் இறந்து போனவர்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. எத்தனை பேர் மீண்டு வந்துள்ளனர் என்பது குறித்துத்தான் நாம் கவலைப்பட வேண்டும்..
இறந்து போனவர்கள் திரும்பி வரப் போவதில்லை. அவர்களைப் பற்றிப் பேசி எந்த பயனும் இல்லை. அதைப் பற்றி விவாதிக்கவும் இப்போது நமக்கு நேரமில்லை. உயிருடன் இருப்பவர்களை முடிந்தவரை காப்பாற்ற முயற்சிப்போம். இறந்து போனவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார் கட்டார்.
ஹரியானாவில் அரசின் கணக்குப்படி மரணமடைந்தோர் எண்ணிக்கை 75 ஆகும். நேற்று மட்டும் புதிதாக 11,504 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications