டெல்லியில் பேய்க் காற்றுடன் கனமழை.. நொய்டா மேம்பாலத்தில் பெயர் பலகை சரிந்து போக்குவரத்து துண்டிப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இத்தனை நாளாக வாட்டி வதைத்த வெயிலில் இருந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ந்தனர்.
காசியாபாத், குர்கான், மானேசர், ஃபரீதாபாத், நொய்டா ஆகிய பகுதிகளில் இடியுடனும் புயல் காற்றுடனும் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தனது ஆய்வில் தெரிவித்தது.

அது போல் ஹரியானாவில் பானிபட், கர்னால், ரோத்தக், சார்கி பகுதியிலும் உத்தரப்பிரதேசத்தில் மதுரை, அலிகார், புலந்த்சாகர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் வடக்கு ராஜஸ்தானில் புயலின் சுழற்சியால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு இடியுடன் கூடிய மழை பெய்தது.
அடி அடியென அடித்து துவைத்த மழையால் வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மரங்களும் வேரோடு சாய்ந்தன. டெல்லி - நொய்டா மேம்பாலத்தில் இருந்த பெயர்ப் பலகை சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மழையால் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் தணிந்து ஈரப்பதம் நிலவும். இதனால் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளிலும் டெல்லியிலும் மழை வரும். ஜூன் 15-ஆம் தேதி வரை வெப்பம் இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications