டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலையிலேயே இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை.. குளிர்ந்து நனைந்த டெல்லி

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் கடும் பனிப்பொழிவு... விமானம், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு-வீடியோ

    டெல்லி: அதிகாலையிலேயே டெல்லியில் கன மழை பெய்து, வெப்பம் தணிந்து, பூமி குளிர்ந்தது.

    இந்த திடீர் மழை காரணமாக சாலைகள், ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    Heavy rains caused by the heat in Delhi

    டெல்லியில் நேற்று மாலை மிதமான மற்றும் இன்று அதிகாலை பெய்த இடியுடன் கூடிய கன மழையால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ரயில் நிலையங்களிலும் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது. நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியில் மழைக்கு வாய்ப்பு என்று அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலை இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.

    மதுரா சாலை, குருதுவார் ஆகிய இடங்களின் சாலைகளில் நீர்த் தேங்கி போக்குவரத்து நெரிசல் உருவானதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். எனினும் டெல்லியின் வெப்பநிலை தணிந்து இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தகவல் தெரிய வருகிறது.

    தலைநகர் டெல்லியில் எப்போதும் மாசு அதிகம் என்பது தெரிந்ததே என்றாலும் , தற்போது பெய்துள்ள மழையால் மாசு வெகுவாக குறைந்துள்ளது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    டெல்லி மழையின்போது சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது. 15 ரயில்கள் தாமதமான நிலையில், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    போக்குவரத்து போலீஸார், போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதில் சிரமம் மேற்கொண்டாலும், விரைந்து செயல்பட்டதாகப் பாராட்டுதல்கள் குவிந்துள்ளது. நொய்டா,காசியாபாத் நகரங்களிலும் கன மழை பெய்து மாசுக் கட்டுப்பாட்டைக் குறைத்துள்ளது.

    English summary
    In the early hours of the morning, heavy rains, the heat worsened, the earth was cooling. However, roads and railways suffered heavy loss of traffic and people were suffering from severe weather.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X