சென்னையில் வெளுத்த 'அதே பேய் மழை'.. டெல்லியை புரட்டி போட்ட 'புதன்'.. அதிர வைக்கும் காட்சிகள்
டெல்லி: டெல்லியில் கனமழையால் பள்ளி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஏராளமான கார்கள் சேதம் அடைந்துள்ளன. நல்லவேளையாக அந்த பகுதியில் பொதுமக்கள் இல்லாததால் பலத்த சேதம் ஏற்படவில்லை. கார்கள் சேதமான நிலையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
புதன்கிழமை காலை, டெல்லி மக்கள் மந்தமான வானத்தை கண்டனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருள் மேகங்கள் சூழ்ந்த நிலையில் காலை 10.05 மணியளவில், இந்திய வானிலை ஆய்வுத் துறையால் பலத்த மழை பெய்யும் என எச்சரித்தது.
இந்நிலையில் திடீரென இடைவிடாமல் கனமழை கொட்டியது. டெல்லி மற்றும் என்.சி.ஆர் முழுவதும் கடுமையாக மழை நீர் தேங்க தொடங்கியது. திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளமாக இருந்தது.

டெல்லி மழை
மதியம் வரை மழை தொடர்ந்ததால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. காலை பீக் அவர்ஸில் பெய்த கனமழை காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் மழையால் சேதம் அடைந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

பலரது வாழ்க்கை
டெல்லியில் இன்று இடைவிடாமல் பெய்த மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளின் படங்களை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

கார்கள் சேதம்
ஒரு வீடியோவில், பள்ளி கட்டிடத்தின் தடுப்பு சுவர் உடைந்து விழுந்துள்ளது. அதில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பலத்த சேதம் அடைந்து இருந்தன. டெல்லியை அடுத்த குருகிராம் மற்றும் நொய்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களின் படங்களும் வீடியோக்களும் மழையில் கோரத்தை காட்டுகின்றன., மிகப்பெரிய குளம் போல் தேங்கியிருந்த மழை நீர் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

நகர்புற கட்டமைப்பு
சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களை போலவே டெல்லியிலும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் மிக கடுமையாக சூழ்ந்துள்ளது. வெறும் ஒரு நாள் மழைக்கு அதுவும் சில மணி நேர மழைக்கு இப்படி வெள்ளம் வந்ததை கண்டு டெல்லி வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகர்புற கட்டமைப்பு குறித்து இன்னமும் அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை இந்த மழை படம் பிடித்து காட்டுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications