40 கிமீ வேகத்துக்கு மேல்“நோ”.. 4 வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. வருகிறது புதிய விதிகள்.!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது நான்கு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனவும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது என புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பழைய வாகனங்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விதிகளும் அமல்படுத்தப்பட்டது.

நாடு முழுவதிலும் ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் எழுந்த நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டம் இந்திய அளவில் அமலான நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பின்னர்தான் அமலாக்கப்பட்டது.

புதிய மோட்டார் வாகன சட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டம்

உரிய அரசாணை வராததால் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலாகவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதற்கு 10 மடங்கு வரை அபராதம் விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பேசுபொருள் ஆகியது.

குழந்தைகளுக்கு ஹெல்மெட்

குழந்தைகளுக்கு ஹெல்மெட்

இந்த நிலையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் குழந்தைகளும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தலைக்கவசம் கட்டாயம் எனவும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது சக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இரு சக்கர வாகனங்களை இயக்க கூடாது என மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதிகள் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு உத்தரவு

4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அணியும் வகையில் அவர்களுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தலைக் கவசங்களை தயாரிக்கும்படி ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது மத்திய அரசின் இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதியில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டு உள்ளதாகவும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

அடுத்த ஆண்டு அமல்

அடுத்த ஆண்டு அமல்

இந்த விதியில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சாதனம் மற்றும் ஹெல்மெட் பயன்படுத்துவதை கட்டாயமாகவும் முன்மொழியப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மக்களின் கருத்தைக் கேட்க வரைவு அறிவிப்பை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில் மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+