கோஹினூர் வைரம் மட்டும் இல்லை.. திப்பு சுல்தான் மோதிரம், ஆப்பிரிக்கா வைரம்னு கொள்ளையடித்த பிரிட்டிஷ்
டெல்லி: இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ்காரர்கள் கோஹினூர் வைரத்தை கொள்ளையடித்துச் சென்றது போல் மேலும் 4 பொருட்களையும் ஆப்பிரிக்கா, எகிப்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் போரிடப்பட்டு இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வைரம் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்கு சென்றது. பின்னர் 1877 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியாவை பேரரசியாக அறிவித்த போது கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.
இந்த கோஹினூர் வைரம் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவிடம் இருந்து வழி வழியாக வந்து எலிசபெத்திடம் இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு மருமகள் கமீலாவின் தலையை அலங்கரிக்க போகிறது.

முயற்சிகள்
இந்த வைரத்தை திரும்ப பெற பல முயற்சிகளை இந்திய அரசு எடுத்தும் பலனளிக்கவில்லை. தற்போது எலிசபெத் காலமானதால், அந்த வைரத்தை இந்தியாவிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கோஹினூர் வைரத்தின் எடை 105 கேரட்டாகும். இது சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும்.

கோஹினூர் வைரம்
இந்த நிலையில் கோஹினூர் வைரத்துடன் மேலும் 4 பொருட்களும் ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவை கிரேட் ஸ்டார் ஆப் ஆப்பிரிக்க டயமண்ட், திப்பு சுல்தானின் மோதிரம், ரோஸட்டா ஸ்டோன், எல்ஜின் மார்பிள்கள் ஆகிய 4 பொருட்களாகும்.

ஸ்டார் ஆப் ஆப்பிரிக்கா
முதலில் ஸ்டார் ஆப் ஆப்பிரிக்க டயமண்ட் பற்றி பார்ப்போம். இதுதான் உலகிலேயே பெரிய வைரம். இது 530 காரட் எடை கொண்டது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த 1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் இருந்து இந்த வைரம் எடுக்கப்பட்டது. இது எட்டாம் எட்வர்டுக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாம். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அந்த வைரம் கொள்ளையடிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்த வைரம் ராணி எலிசபெத் வைத்திருந்த செங்கோலில் பதிக்கப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்தான் மோதிரம்
அடுத்தது திப்பு சுல்தானின் மோதிரம்- மைசூரை ஆண்ட ஹைதர் அலியின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்தான் திப்பு சுல்தான். ஆங்கிலேய படைகளுடனான இரண்டாம் ஆங்கில்- மைசூர் போரில் ஹைதர் அலியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் திப்புதான். இந்த நிலையில் ஹைதர் அலியின் மரணத்திற்கு பிறகு திப்பு சுல்தான் மைசூர் மன்னரானார். இவர் கடந்த 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுடனான போரின் போது திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டு இறந்தார். அப்போது அவரது உடலில் இருந்து மோதிரத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. அந்த மோதிரம் பிரிட்டனில் அடையாளம் தெரியாத நபருக்கு 1.45 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

ரோஸட்டா ஸ்டோன்
அடுத்தபடியாக ரோஸட்டா ஸ்டோன்- கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் ரோஸட்டா ஸ்டோனை திருப்பி கொடுக்குமாறு எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்த கல் தற்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் காணப்படுகிறது. ரோஸட்டா கல் ஆங்கிலேயர்களால் திருடப்பட்டது என்பதை தங்களால் நிரூபிக்க முடியும் என்கிறார்கள்.

எலிஜின் மார்பிள்ஸ்
கிரீஸ் ஏதென்ஸின் பார்த்தெனானின் சுவற்றிலிருந்து சலவைக் கற்களை எலிஜின் பிரபு நீக்கியதாக கூறப்படுகிறது. அதை லண்டனுக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனால்தான் இந்த விலைமதிப்பில்லாத சலவைக் கற்களுக்கு எலிஜின் மார்பிள்ஸ் என பெயர் வந்தது. 1925 ம் ஆண்டு முதல் இந்த விலைமதிப்பில்லாத கற்களை திருப்பிக் கொடுக்குமாறு கிரீஸ் கேட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் அந்த கற்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications