மிக உச்சமாக 24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா- மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை தாண்டியது பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் மிக உச்சமாக 24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 543 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விவரங்கள்:

24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா

24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 24 மணிநேரத்தில் 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,77,618 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6,77,423 . தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 3,73,379 மட்டுமே.

3 லட்சத்தை தாண்டிய மகாராஷ்டிரா

3 லட்சத்தை தாண்டிய மகாராஷ்டிரா

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 543. இதனைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 26,816 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,00,937 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம்- டெல்லி நிலவரம்

தமிழகம்- டெல்லி நிலவரம்

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714 ஆக இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,21,582 பேரும் 4-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 59652 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

குறைவான பாதிப்பு

குறைவான பாதிப்பு

இதேபோல் குஜராத்தில் 47,390 பேரும் உ.பி.யில் 47,036 பேரும் ஆந்திராவில் 44,609 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவிலேயே அந்தமான் தீவுகளில்தான் மிக குறைவாக 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை.

இங்கிலாந்தைவிட அதிகம்

இங்கிலாந்தைவிட அதிகம்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இது இங்கிலாந்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட அதிகம். இங்கிலாந்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,066. மகாராஷ்டிரா ஒரு நாடாக இருந்திருந்தால் உலகில் கொரோனா அதிம் பாதித்த 10-வது நாடாக இருந்திருக்கும்.

டெல்லியில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகம்

டெல்லியில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகம்

டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை மிக மிக அதிகமாகி வருகிறது. டெல்லியில் கொரோனா குணமடைவோர் விகிதம் 83.3% ஆக உள்ளது. டெல்லியில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை விட அதிகமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+