ஹிஜாப் தடை.. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து.. இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு!
டெல்லி: ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அங்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
அங்கு ஹிஜாப் அணிந்து பியூ கல்லூரிகளுக்கு வந்த மாணவியருக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து வகுப்பிற்கு ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்து வர கூடாது என்று மாநில அரசு கட்டுப்பாடு விதித்தது.

ஹிஜாப் வழக்கு விவரம்
இந்த வழக்கில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த விசாரணை விறுவிறுப்பாக நடந்த நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய, தீர்ப்பில் ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும்.

உச்ச நீதிமன்றம் ஹிஜாப்
உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக குந்தபுராவை சேர்ந்த பியூ கல்லூரி மாணவி ஆயிசா சையாபத் என்ற மாணவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன்பின் குந்தபுரா மாணவிகள் மேலும் இருவர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தனர். இந்த மாணவிகள் சார்பாக கடந்த மார்ச் 16ம் தேதி வழக்கறிஞர் காமத் ஆஜர் ஆனார். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார். ஹோலி பண்டிகைக்கு பின்பாக இதை விசாரிப்பதாக கூறினார்.

ஹிஜாப் வழக்கு
ஹோலி விடுமுறைக்கு பின் மீண்டும் இதை விசாரிக்க வழக்கறிஞர் காமத் கடந்த 24ம் தேதி கோரிக்கை விடுத்தார். 28ம் தேதி பியு கல்லூரி தேர்வுகள் நடக்க உள்ளன. அதற்கு முன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் தேர்விற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தேர்விற்காக வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார். ஆனால் வழக்கு எப்போது விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம்
ஏற்கனவே இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பான சமஸ்தா கேரளா ஜெம் - மாயுத் உலமா என்ற அமைப்பு சார்பாக தனியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், குரானை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தவறான முன் உதாரணங்களை காட்டி வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளதால் அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications