இமாச்சல் பிரதேச முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: இமாச்சல பிரதேச முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்வீந்தர் சிங் சுகு, தீவிர வயிற்று வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று இரவு அடிவயிற்றில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் வயிற்றில் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தொற்று பாதிப்பை தடுக்க தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் வலி குறையாததால் அவர் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, "இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இன்று காலை 11.20 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, இரைப்பை குடலியல்துறை மருத்துவப் பேராசிரியர் பிரமோத் கர்க் தலைமையிலான மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். லேசான கணைய அழற்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஆரோக்கியமாக உள்ளார்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications