இந்தியாவின் 61% பகுதி ஹை ரிஸ்க் பகுதிகள்.. நொடியில் பூகம்பம் தாக்கும்.. பேரழிவு நிச்சயம்..! வார்னிங்
டெல்லி: இந்தியாவில் எங்கு பூகம்பம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த வரைபடம் இப்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 61% நிலப்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த இமயமலையும் ஹை ரிஸ்க் மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் ஏற்படும் மிகப் பெரிய பேரழிவுகளில் ஒன்று பூகம்பம்.. நொடிப் பொழுதில் தாக்கும் இந்த பூகம்பங்கள், மனிதக் குலமே எதிர்பார்க்காத அழிவை ஏற்படுத்தும். பூகம்பம் ஏற்படும்போது மக்களைப் பாதுகாக்கக் கூட போதியளவு நேரம் இருக்காது என்பதாலேயே அது பேரழிவை ஏற்படுத்துகிறது. மேலும், பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்கவும் முடியாது.

61% ஆபத்து
இருப்பினும், பூகம்பம் பொதுவாக எங்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது தொடர்பாகப் பூகம்ப அபாய வரைபடமும் வெளியிடப்படும். இந்த மேப் தான் இப்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம், இந்தியாவின் பூகம்ப அபாய வரைபடத்தில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது.. புதிய வரைப்படத்தின்படி நாட்டின் 61% நிலப்பரப்பு மிதமான, அதிக ஆபத்தில் உள்ளது.
மேலும், ஒட்டுமொத்த இமயமலைப் பிராந்தியமும் இப்போது மண்டலம் VI-ல் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஒட்டுமொத்த இமயமலை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இமயமலையும் இந்த ஹை ரிஸ்க் பகுதிக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.
இமயமலை
இதற்கு முன்பு இமயமலை மண்டலம் IV மற்றும் V என இரண்டிலும் வந்தது. அதாவது குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே அதிக ஆபத்தானது. மற்ற பகுதிகளில் பெரிய ஆபத்து இல்லை என கூறப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது மொத்த இமயமலையும் ஹை ரிஸ்க் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலையில் கடந்த 200 ஆண்டுகளாகப் பெரிய பூகம்பங்கள் ஏற்படவில்லை. இதனால் அங்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்றே ஆய்வாளர்கள் முன்பு கருதி வந்த நிலையில், இப்போது அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார்கள்.
டெக்டோனிக்
உலகின் மிகவும் ஆக்டிவான டெக்டோனிக் எல்லையில் இமயமலை இருக்கிறது. இந்திய தட்டு ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சென்டிமீட்டர் வரை மேல்நோக்கி நகர்கிறது. அது யுரேசியப் தட்டை நோக்கி செல்கிறது. இந்த சக்திவாய்ந்த நகர்வு தான் இமயமலையை உருவாக்கியது. இப்போதும் இந்திய தட்டு யுரேசிய தட்டை மேல்நோக்கி தள்ளும் சூழலில் அடியில் பெரும் அழுத்தம் உருவாக்குகிறது. இந்த அழுத்தம் திடீரென வெளிப்படும்போது மாபெரும் நிலநடுக்கம் ஏற்படும்.
இமயமலைப் பகுதியான உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் புவியியல் ரீதியாக மிகவும் இளமையானது. இதன் காரணமாக அங்கு பாறைகள் உடைவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இது இமயமலைத் தொடரின் நிலையற்ற தன்மையை அதிகரிக்கிறது.
நிலநடுக்கம் காரணம்
இந்த பூமியில் மொத்தம் ஏழு முக்கிய டெக்டோனிக் தகடுகள் உள்ளன. அவை பூமிக்கு அடியில் மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த டெக்டோனிக் தகடு சில நேரம் மற்றொரு தகடு உடன் வலிமையாக அழித்தும் போது எதிர்பாராத நேரத்தில் அதிக எனர்ஜி ரிலீஸ் ஆகும். இதன் காரணமாகவே ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும். இப்போது நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடங்கள் கட்டும் முறை இருப்பதால் பாதிப்புகளை ஓரளவுக்குச் சமாளிக்கலாம். இருப்பினும், இந்தியாவில் இந்த கட்டுமானம் இன்னும் பெரியளவில் பிரபலமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications