நாடாளுமன்றத்தை திடீரென ஒத்திவச்சாங்க.. இப்போதான் உண்மை தெரியுது.. பாய்ந்து வந்த காங்கிரஸ்
டெல்லி: யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார் என்று செபி தலைவரை மறைமுகமாக காங்கிரஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளது. மேலும், நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் திடீரென தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகலில் ஒத்திவைக்கப்பட்டது ஏன் என்றும் இப்போது புரிகிறது என காங்கிரஸ் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு அதானி மீது ஹிண்டன்பர்க் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. எனினும் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

அதில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார். இதன் காரணமாக தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறது.
அதாவது செபி -யானது அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்தது தான் காரணம் என்றும், இதனால் தான் அதானி குழுமம் எந்த அச்சமும் இன்றி பணிகளை செய்கிறது. இதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு இடையே உள்ள உறவு தான் காரணம் என்றும் அந்த குற்றச்சாட்டில் கூறியிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள அதானி, இந்த அறிக்கை முழுக்க முழுக்க எந்த உண்மையும் இல்லாதது. எங்கள் வாழ்க்கையும் நிதியும் ஒரு திறந்த புத்தகம். எங்களின் முதலீடுகளை நாங்கள் வெளிப்படையாகவே செய்து இருக்கிறோம். எங்களின் முதலீடுகள் பற்றிய அனைத்து தகவல்களும் பல ஆண்டுகளாக செபி-க்கு வழங்கப்பட்டுள்ளன.
நாங்கள் செபிக்கு வருவதற்கு முன்பு முதல் இப்போது வரை அனைத்து காலத்திலும் மேற்கொண்ட நிதி முதலீடுகள் குறித்த விவரங்களை வெளியிட தயாராக இருக்கிறோம். வரும் நாட்களில் இது தொடர்பான முழுமையான விளக்கம் வெளியிடுவோம் என்று அதானி தெரிவித்துள்ளது. செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை சாடியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதவது:-
யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார் என்று செபி தலைவரை மறைமுகமாக சாடியிருக்கிறார். தொடர்ந்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகலில் ஒத்திவைக்கப்பட்டது. ஏன் இப்படி நடந்தது என தற்போது தெரியவருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications