குட்டி ராட்சசன்! பெரிய டேங்கரே காலி! இந்தியா - பாகிஸ்தான் இரண்டும் டிரோன்களை பயன்படுத்த காரணம் என்ன?
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இரண்டு தங்களுக்கு இடையிலான மோதலில் டிரோன்களை பயன்படுத்தி உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது பாகிஸ்தானும் இதேபோல் டிரோன்களை பயன்படுத்தி உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இரண்டும் டிரோன்களை பயன்படுத்த காரணம் உள்ளது. டிரோன்கள்தான் எதிர்காலம். ஏனென்றால் இதில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதோடு போர் விமானம் அளவிற்கு காஸ்ட்லி கிடையாது. இவை suicide டிரோன்கள் என்பதால் கீழே விழுந்து தாக்குவதே குறிக்கோள்.
அதனால் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் பெரிய இழப்பு இல்லை. மிக தாழ்வாக பறக்கும் என்பதால் ரேடாரில் தப்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மனிதர் இயக்கம் ஜெட் விமானங்களை விட டிரோன்கள் நன்றாக ரோந்து பணிகளை செய்யும். இதற்கான எரிபொருள் செலவு குறைவு. மிக சிறப்பாக உளவு பணிகளை செய்யலாம்.

சிறியதாக இருப்பதால் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இதை தடுக்க முடியாமல் திணறலாம். பார்க்க குட்டியாக இருக்கும். ஆனால் ஒரு டிரோன் விழுந்து தாக்கினால் மொத்தமாக 2-3 டேங்கர்களை காலி செய்ய முடியும். அந்த அளவிற்கு பவர் கொண்டவை இவை.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது பாகிஸ்தானும் இதேபோல் டிரோன்களை பயன்படுத்தி உள்ளன. இந்தியா பயன்படுத்தியது நவீன டிரோன்கள். பாகிஸ்தான் பயன்படுத்தியது பவர் குறைவான விலை குறைவான டிரோன்கள் ஆகும்.
என்ன மாதிரியான டிரோன்கள் இவை
பாகிஸ்தான் உள்ளே தாக்குதல்களை நடத்த இந்தியா சுசைட் ஏவுகணைகள் எனப்படும் "Suicide Drones" ஆயுதங்களை பயன்படுத்தியது. இதை loitering munitions என்பார்கள். அதாவது இங்கும் அங்கும் மாறி மாறி மிதந்து சென்று அதன்பின்னர் தாக்கும் ஏவுகணைகள்.
நீங்கள் ஏவுகணை தாக்குதல் வீடியோக்களை பார்த்து இருக்கலாம். அதில் ஒரு டார்கெட் செய்யப்பட்டால்.. அது நேரடியாக சென்று தாக்கும். ஆனால் ஒரு ஏவுகணை பறந்து செல்கிறது. அதில் டார்கெட் கொடுக்கப்படவில்லை. மாறாக பறந்து செல்லும் போதே டார்கெட்டை கண்டுபிடிக்கிறது. இதற்காக அந்த ஏவுகணை இங்கும் அங்கும் நகர்ந்து செல்கிறது.
அதாவது அதில் இருக்கும் கேமராக்கள், சென்சார்கள் மூலம் தீவிரவாத கேம்ப் கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு ஆள் இல்லாத டிரோன் போல தீவிரவாத கேம்ப்பை இதை கண்டுபிடிக்கிறது. அப்படி கண்டுபிடித்த பின் இந்த ஏவுகணை அங்கே விழுந்து வெடிக்கிறது என்றால் எப்படி இருக்கும். இதுதான் "Suicide Drones".
அதாவது ஒரே சமயத்தில் ட்ரோன் போல பறந்து டார்கெட்டை கண்டுபிடித்து அதன்பின் அங்கேயே விழுந்து ஏவுகணை போல அட்டாக் செய்யும் என்பதால் இதை "Suicide Drones" என்கிறார்கள்.
இந்தியாவில் Nagastra-1 எனப்படும் "Suicide Drones" உள்ளது. இதைத்தான் இன்று தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். இது சிறிய அளவில் இருந்தாலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத்தான் பாகிஸ்தான் உள்ளே இந்தியா பயன்படுத்தியது. இதை பார்த்து பாகிஸ்தானும் suicide டிரோன்களை பயன்படுத்தி உள்ளது. ஆனால் பாகிஸ்தானால் இந்தியா போல வெற்றிகரமாக இதில் தாக்குதல்களை நடத்த முடியவில்லை.
ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.
பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications