'பாலியல் புகார்' பிரிஜ் பூஷண்- 2017-ல் கோவாவில் செய்த அந்த காரியம்-நன்றி மறக்காது முட்டு தரும் பாஜக!
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மத்திய அரசால் தொடர்ந்து பாதுகாக்கப்படடு வருவதற்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அதில் ஒன்றுதான் கோவா விவகாரம்.
இந்தியாவுக்கு வெளிநாட்டு மண்ணில் பெருமையும் பதக்கமும் தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்களுக்குள்ளானவர் பாஜக எம்பி பிரிஜ் பூஷண். இந்திய மல்யுத்த சங்க கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பவர் பிரிஜ் பூஷண். தேசத்துக்கு பெருமை தேடி தந்த வீராங்கனைகள் கண்ணீரும் கம்பலையுமாக டெல்லி வீதிகளில் போராடிப் பார்த்தும் பிரிஜ் பூஷண் சிறைக்குப் போகவில்லை. அவரை சிறைக்கு அனுப்பவும் பாஜகவும் மத்திய அரசும் விரும்பாது. ஏனெனில் கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிழல் உலக தாதாவாக கோலோச்சுகிற பிரிஜ் பூஷணால் பாஜக செய்ய வேண்டிய அறுவடைகள் ஏராளம். அதுவும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பிரிஜ் பூஷண் மீது கை வைப்பது என்பதெல்லாம் கனவுதான் என்கிறது பாஜக வட்டாரங்கள்.

மேலும் உத்தரப்பிரதேசத்தை முன்வைத்து மட்டுமே பிரிஜ் பூஷணுக்கு பாஜக பக்கபலமாக நிற்கவில்லை. 2017-ம் ஆண்டு கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் மிக முக்கியமான பங்களிப்பை செய்தவரும் பிரிஜ் பூஷண் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். கோவா மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். அத்தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 13; மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 3; கோவா முன்னணி கட்சி 3; தேசியவாத காங்கிரஸ் 1 இடமும் பெற்றிருந்தன.
2017-ல் கோவா தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளோம்; அதனால் நம்மைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என மிதப்பில் இருந்தது காங்கிரஸ். ஆனால் திடீரென சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துவிட்டது. இது காங்கிரஸை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கி புலம்பவும் வைத்தது. அப்படி பாஜக ஆட்சி அமைத்ததில்தான் பிரிஜ் பூஷண் முக்கிய பங்கு வகித்தார் என்கிறது தி பிரிண்ட் இணையதளத்தின் செய்தி கட்டுரை.
2017-ல் பாஜகவுக்கு பெரும்பான்மை தேவைப்பட்ட நிலையில் கோவா முன்னணியின் தலைவர் விஜய் சர்தேசா ஆதரவு தெரிவித்திருந்தார். அவரிடம் 3 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவரை வளைத்துப் போட கோவாவுக்கு தனி விமானத்தில் பிரிஜ் பூஷணை டெல்லி பாஜக மேலிடம் அனுப்பி வைத்தது. பிரிஜ் பூஷணுடனான பேச்சுவார்த்தையின் போது தமது கட்சியின் 3 எம்.எல்.ஏக்களுக்குமே அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்தார் விஜய் சர்தேசா. இதனை பனாஜியில் இருந்தபடியே டெல்லி தலைமைக்கு பிரிஜ் பூஷண் பாஸ் செய்ய க்ரீன் சிக்னல் கிடைத்தது. இதனையடுத்து விஜய் சர்தேசாவிடம் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் கடிதம் கிடைத்தது. இதனால் பாஜக உடனடியாக மனோகர் பாரிக்கர் தலைமையில் அப்போது ஆட்சி அமைத்தது. இத்தனைக்கும் கோவா மாநில பாஜக தலைவர்களுக்கே பிரிஜ் பூஷணின் பங்களிப்பு இப்போதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயமாம். ஆனால் பிரிஜ் பூஷண் தம்மை சந்தித்து பேசி ஒப்புக் கொள்ள வைத்ததை தி பிரிண்ட் இணையதளத்திடம் விஜய் சர்தேசா உறுதி செய்திருக்கிறார்.
அப்படி கோவாவில் ஒரு கட்சியை ஆட்சி அமைக்க ஆதரவு தரச் செய்யும் அளவுக்கு பிரிஜ் பூஷணுக்கு என்ன செல்வாக்கு என கேட்கிறீர்களா? அப்போது Progressive Wrestling Association of Goa என்ற அமைப்பின் தலைவராகவும் விஜய் சர்தேசா இருந்தார். இந்த மல்யுத்த விளையாட்டு லிங்க் மூலமே கோவாவில் அரசியல் சித்துவிளையாட்டு அரங்கேர பிரிஜ் பூஷணும் காரணமாக இருந்துள்ளார் என்கிறது அந்த செய்திக் கட்டுரை.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications