கமல்ஹாசனுக்கு துணையாக வந்த "மகாத்மா காந்தி".. தக் லைஃப் வழக்கில் வெல்ல.. காரணமான அந்த பாயிண்ட்
டெல்லி: தக் லைஃப் படம் தொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மகாத்மா காந்தி குறித்த எடுத்துக்காட்டு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது கவனம் பெற்றது.
திரைப்படங்களுக்கு தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை விட சட்டத்தின் ஆட்சிதான் மேலோங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கும்பல் வன்முறையின் அச்சுறுத்தல் காரணமாக திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்த முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. "கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சட்டத்தின் ஆட்சி
திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. குண்டர்கள், கும்பல்கள் நமது வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது; உரிய சான்றிதழ் பெற்ற பின் ஒரு திரைப்படத்தை வெளியிட எல்லாருக்கும் உரிமை உண்டு; அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அது வேண்டுமா, வேண்டாமா என மக்கள் முடிவு செய்யட்டும்; திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது;
படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம் நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடகாவில் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்க கும்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறி சித்தராமையா அரசுக்கு வியாழக்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர்களாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் இருக்க வேண்டும். மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதெல்லாம் மக்களின் உணர்வு அல்ல
நீதிமன்றம் மேலும் கூறுகையில், திரைப்படத்தைத் திரையிட வேண்டாம் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுப்பதை பொது உணர்வு என்று அர்த்தப்படுத்தக் கூடாது. திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. திரையிடப்பட்ட பிறகு, அதைப் பார்ப்பதா இல்லையா என்பதைப் பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றனர்.
உயர் நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை
மனுதாரர் எம்.மகேஷ் ரெட்டியின் வழக்கறிஞர் ஏ.வேலன், கர்நாடகாவில் திரைப்படத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த மாநில அரசு வழக்கறிஞர் டி.எல்.சிதானந்தா, மாநில திரையரங்கு சங்கத்துடன் பிரச்சினைக்குத் தீர்வு காண கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், இந்த விஷயத்தில் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டிருப்பதாகவும், கமல்ஹாசன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதாகவும் மற்றொரு வழக்கறிஞர் கூறினார்.
நீதிபதி மன்மோகன் கூறுகையில், "கமல் வருத்தம் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல உயர் நீதிமன்றத்திற்கு எந்த உரிமையும் இல்லை. சட்டத்தின் பாதுகாவலராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படம் மாநிலத்தில் திரையிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
யாராவது ஒரு மொழியைப் பற்றி தவறான அறிக்கை வெளியிட்டாலும், அதை அறிஞர்களும் பொதுமக்களும் விவாதித்து, ஆதாரங்களை வழங்கி, அவர் தவறானவர் என்று நிரூபிக்க வேண்டும். மாறாக அவரை தடை செய்ய கூடாது, என்றனர்.
காந்தி வழக்கு
சமீபத்தில் நடந்த இம்ரான் பிரதாப்கர்ஹிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி புயான், மராத்தி நாடகமான 'மீ நாதுராம் கோட்சே போல்டோய்' நாடகத்தை காந்தியை பற்றிய சித்தரிப்புகளுக்காக மகாராஷ்டிரா மற்றும் கேரள அரசுகள் தடை செய்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் மும்பை உயர் நீதிமன்றம் தலையிட்டதையும், பேச்சு சுதந்திர உரிமையை நிலைநாட்டியதையும் நினைவு கூர்ந்தார். படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் அனுமதித்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
மகாத்மா காந்தி மதிக்கப்படலாம். ஆனால், அவரைப் பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது. அதேபோல், ஒரு நடிகர் ஒரு கருத்தை கூறியதற்காக, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்த முடியாது.. அதேதான் தக் லைஃப் படத்திற்கும் பொருந்தும் என்று நீதிபதி புயான் கூறினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications