ஆம்ஆத்மியை வீழ்த்த பாஜக இறக்கிய 3 பிரமாஸ்திரம்.. டெல்லியில் கோட்டைவிட்ட கெஜ்ரிவால்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தோற்று 10 ஆண்டு ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது. அதேவேளையில் 27 ஆண்டு பிரேக்கிற்கு பிறகு பாஜக மீண்டும் டெல்லியில் அரியணை ஏறுகிறது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மியை வீழ்த்த பாஜகவின் 3 பிரமாஸ்திரம் தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்துள்ளது.பாஜக வெற்றி பெற்றுள்ளது.

delhi election 2025 delhi election result 2025 2025 2025

ஓட்டு எண்ணிக்கை முடிவில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வென்றால் போதும். தற்போது பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. உள்ளது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை இழந்ததோடு மட்டுமின்றி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவும் தோற்றுள்ளனர். இதனால் ஆம்ஆத்மி கட்சியினருக்கு இந்த தேர்தல் முடிவு என்பது அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது. இதனால் மறுபுறம் பாஜகவினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே தான் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை பாஜக எப்படி வீழ்த்தியது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் 3 முக்கிய மேட்டர்கள் உள்ளனர். பாஜக பிளான் செய்து ஆம்ஆத்மியை டெல்லியில் காலி செய்துள்ளது.

முதல் மேட்டர்: என்னவென்றால் புதிய மதுபான கொள்கை ஊழல். அதாவது டெல்லியில் கடந்த 2011ல் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. இதில் லஞ்சமாக பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. தொழிலதிபர்களிடம் இருந்து ஆம்ஆத்மி தலைவர்கள் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து புதிய மதுபான கொள்கை கைவிடப்பட்டது.

ஆனாலும் ஆம்ஆத்மி மீதான புகார் மட்டும் பூதாகரமானது. சிபிஐ, அமலாக்கத்துறையினர் ஆம்ஆத்மி தலைவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி விசாரித்தனர். இதில் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்தபடியே துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ராஜ்யசபா எம்பியான சஞ்சய் சிங், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம்ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கு பாஜக உள்நோக்கத்துடன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆம்ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டினர். இது எடுபடவில்லை. அதேவேளையில் இந்த ஊழல் குற்றச்சாட்டு என்பது ஆம்ஆத்மி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளியது. இதனை மக்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. ஏனென்றால் ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது மக்களின் மனதில் நீங்காமல் இருந்தது. இதனை தேர்தல் சமயத்தில் பாஜக முன்வைத்து பிரசாரம் செய்து வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெற்றுள்ளது.

2வது மேட்டர்: என்னவென்றால் ஷீலா மஹால் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு என்பது அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அலுவலக இல்லத்தை புனரமைக்க ரூ.33.66 கோடி செலவிட்டதை பாஜக தொடர்ந்து பிரசாரமாக மக்களிடம் எடுத்து சென்றது. அலுவலக இல்லத்தை ரூ.33.66 கோடிக்கு புனரமைத்தவர் தான் கெஜ்ரிவால் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை பேசினர். இதற்கு பதிலடியாக ஆம்ஆத்மி தலைவர்களும், பிரதமர் மோடி அணியும் ஆடை, பயணிக்கும் வாகனம், விமானம் பற்றி பேசினர். ஆனால் ஆம்ஆத்மியின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. மாறாக பாஜகவின் பிரசாரத்தை மக்கள் ஏற்று கொண்டு ஓட்டை மாற்றி போட்டுள்ளனர்.

3வது மேட்டர்: என்னவென்றால் அது எதிர்ப்பு அலை. அதாவது கடந்த 2015 முதல் 10 ஆண்டுகளாக ஆம்ஆத்மி கட்சி தான் டெல்லியில் ஆட்சியில் இருந்தது. கடந்த சில மாதங்களாக அதிஷி முதல்வராக செயல்பட்ட நிலையில் மீதமுள்ள 9 ஆண்டுகளுக்கு மேலாக அரவிந்த் கெஜ்ரிவால் தான் முதல்வராக இருந்தார். பொதுவாகவே ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் அது மக்களிடம் எதிர்ப்பலையை சந்திக்கும். இப்படியான சூழலில் தான் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது அதிகரித்தது. அதேபோல் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கும் தீர்வு காணாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றத்தை விரும்பி பாஜகவுக்கு வாக்கு செலுத்தி உள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+