Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசேனா கட்சியோடு பறிபோன சின்னம்..உத்தவ்வை வென்ற ஏக்நாத் ஷிண்டே..காரணமே இதுதான்! உத்தரவின் பின்னணி

மகாராஷ்டிராவில் உண்மையான சிவசேனா என்பது அம்மாநில முதல்வரான ஏக்நாத் ஷிண்டே அணி தான் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் சிவசேனா கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டது. இதையடுத்து சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று உண்மையான சிவசேனா என்பது ஏக்நாத் ஷிண்டே அணி தான். அவர்கள் தான் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. சிவசேனா கட்சியை தந்தை பால் தாக்கரே துவங்கி நடத்தி வந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவிடம், உத்தவ் தாக்கரே இழந்துள்ளார். இந்நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டே எப்படி கட்சி, சின்னத்தை கைப்பற்றினார். எதனடிப்படையில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

மகாவிகாஷ் அகாடி என்ற பெயரில் அமைந்த இந்த கூட்டணி ஆட்சியில் முதல்வராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே இருந்தார். இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நடந்தது. கடந்த ஆண்டு மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

வில் அம்பு சின்னம் முடக்கம்

வில் அம்பு சின்னம் முடக்கம்

இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இதனால் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியை பிடித்தனர். ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரியது. கடந்த நவம்பர் மாதம் அந்தேரி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இருஅணியினரும் கட்சி பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் முடக்கியது. இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பரில் அந்தேரி கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தலில் உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீபச்சுடர்'சின்னமும், அவரது அணி 'சிவசேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரே' என்ற பெயரிலும் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. அதேபோல் ஏக்நாத் ஷிண்டே அணி 'பாலசாஹேபாஞ்சீ சிவசேனா' என்ற பெயரில் இரு வாளுடன் கூடிய கேடயம் சின்னம் ஒதுக்கியது.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெற்றி

ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெற்றி

இதன் தொடர்ச்சியாக சிவசேனா மற்றும் வில் அம்பு சின்னத்தை கைப்பற்ற ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தரப்பு தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு விபரங்களை எடுத்து வைத்து முறையிட்டது. ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன.

இந்நிலையில் தான் நேற்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. அதாவது உண்மையான சிவசேனா என்பது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் என அங்கீகரித்தது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கப்படும் என அறிவித்தது.

உத்தவ் அணிக்கு ஷாக்

உத்தவ் அணிக்கு ஷாக்

இது ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பெரிய வெற்றியாகும். மாறாக உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணிக்கு கடும் பின்னடைவாகும். உத்தவ் தாக்கரேவின் தந்தையான பால் தாக்கரே சிவசேனா கட்சியை துவங்கிய நிலையில் உத்தவ் தாக்கரே தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது ஒட்டுமொத்தமாக சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் உத்தவ் தாக்கேரேவை விட்டு சென்றுள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே உள்பட அவரது ஆதரவாளர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர். மேலும் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கட்சி விதிகளில் மீறல்

கட்சி விதிகளில் மீறல்

இந்நிலையில் தான் சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே எப்படி கைப்பற்றியது என்பது பற்றிய விபரங்கள் தேர்தல் ஆணையத்தின் 78 பக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய விபரங்கள் வருமாறு: சிவசேனா கட்சியின் தற்போதைய அரசியலமைப்பு விதிமுறை என்பது ஜனநாயக விரோதமாக உள்ளது. தேர்தல் எதுவுமின்றி தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது கட்சி கட்டமைப்பு மீதான நம்பிக்கையை ஏற்படுத்த தவறுவது போல் இருக்கும். 2018 ல் சிவசேனா கட்சி விதிமுறைகள் திருத்தப்பட்ட நிலையில் அது தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. மேலும் 1999ல் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத பல அம்சங்கள் ஜனநாயக விரோதமான முறையில் மீண்டு கொண்டு வரப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

எம்எல்ஏக்கள் பலம்

எம்எல்ஏக்கள் பலம்

கடந்த 2019 சட்டசபை தேர்தல் சிவசேனா கட்சி 55 எம்எல்ஏக்களை பெற்றது. இந்த 55 பேரும் சேர்ந்து சிவசேனா கட்சிக்காக மொத்தம் 47 லட்சத்து 82 ஆயிரத்து 440 ஓட்டுக்களை பெற்றனர். தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் மொத்தம் 40 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் மொத்த ஓட்டில் 36 லட்சத்து 57 ஆயிரத்து 327 ஓட்டுக்களை பெற்றுள்ளனர். இதன்மூலம் அவரது அணியே பலமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மொத்த ஓட்டில் 76 சதவீதத்தை இந்த அணி கொண்டுள்ளது. மாறாக உத்தவ் தாக்கரே அணியில் 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் இவர்கள் பெற்ற ஓட்டுக்கள் என்பது 11 லட்சத்து 25 ஆயிரத்த 113 என்ற அளவில் மட்டுமே உள்ளது.

எம்பிக்கள் பலம்

எம்பிக்கள் பலம்

மேலும் கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் 18 பேர் சிவசேனாவில் வெற்றி பெற்றனர். இவர்கள் 1,02,45,143 ஓட்டுக்களை பெற்றனர். இதில் தற்போது 13 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் உள்ள நிலையில் இவர்கள் மட்டும் 74,88,634 ஓட்டுக்களை பெற்றுள்ளனர். இது சிவசேனா வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற மொத்த ஓட்டுக்களில் 73 சதவீதமாகும். மாறாக உத்தவ் தாக்கரே அணியில் உள்ள 5 எம்பிக்கள் 27,56,509 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இதுபோன்ற காரணங்கள் தான் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பலமாக அமைந்தன. மாறாக உத்தவ் தாக்கரேவின் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தின. அதாவது சிவசேனா கட்சியின் பெயரை பயன்படுத்தியும், சின்னத்தில் போட்டியிட்டும் வெற்றி பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் அதிகம் உள்ளதால் தான் இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு ஆதரவாக உத்தரவை வழங்கி உள்ளது. இதன்மூலம் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனா கட்சியையும், கட்சியின் சின்னமான வில் அம்பையும் ஏக்நாத் ஷிண்டே தட்டி பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+