இந்தியாவை தாக்க நினைத்த ஒரு தனி நபரின் ஈகோ.. அசிம் முனீர் கனவை சுக்குநூறாக உடைத்த இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் உடன் மேற்கொண்ட போரை இந்தியா நிறுத்த முடிவு செய்துள்ளது. எல்லையில் இதனால் அமைதி திரும்பி உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் கனவை இந்தியா அடித்து உடைத்துள்ளது.

பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துவது குறித்து இன்று மதியம் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமில்லா நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. முழுக்க முழுக்க இந்தியாவின் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது. அதாவது இந்தியா போட்ட விதிகளை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டு உள்ளது.

How did India break the bad plans and dreams of Asim Munir with its massive attacks

அசிம் முனீர் கனவு

இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் கனவை இந்தியா அடித்து உடைத்துள்ளது. பொதுவாக இந்தியாவில் அவ்வப்போது பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்துவது வழக்கம். இதற்கு இந்தியா பல கட்டமாக பதிலடியை கொடுத்துள்ளது. உதாரணமாக புல்வாமா தாக்குதலுக்கு பாலக்கோடு பதிலடி, அதேபோல் உரி அட்டாக் தொடங்கி பல முறை இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் அட்டாக் தாக்குதல்களை நடத்தி உள்ளது.

ஆனால் இப்படி நடத்தப்பட்ட பதிலடி தாக்குதல் அனைத்திலும் பாகிஸ்தான் இந்தியாவை விமர்சனம் செய்யும். ஏன் இப்படிஸ் செய்கிறீர்கள் என்று கண்டனம் செய்யும். உதாரணமாக பாலக்கோடு பதிலடி தாக்குதலின் போது இந்தியாவை பாகிஸ்தான் ராணுவம் கண்டித்தது. பாகிஸ்தான் ராணுவ விமானப்படை கூட இந்திய போர் விமானங்களுடன் வானத்தில் மோதலில் ஈடுபட்டது. ஆனால் அப்போதெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை நேரடியாக தாக்கவில்லை. இந்தியா உள்ளே வந்து தாக்க முயற்சிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் அதிகபட்சம் pokல் தாக்குதல் நடத்தும். இப்போது நடப்பது போல உள்ளே புகுந்து தாக்க முயற்சிக்காது.

இதற்கு காரணம் உள்ளது. அப்போது ராணுவ தளபதியாக கமர் ஜாவேத் பஜ்வா இருந்தார். அவருக்கு தெரியும்.. இந்தியா - பாகிஸ்தான் போர் வந்தால்.. இந்தியாதான் வெல்லும் . பாகிஸ்தான் 10 நாட்கள் கூட தாங்காது. பாகிஸ்தானின் ராணுவத்திடம் பலம் இல்லை. இருக்கிற pokவையும் இழக்க நேரிடும் என்பது அவருக்கு தெரியும். அதன் காரணமாகவே அவர் போருக்கு செல்லவில்லை. ஆனால் இப்போது மட்டும் எப்படி பாகிஸ்தான் உள்ளே வந்து அடிக்க பார்க்கிறது என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா?

தனி மனிதரின் ஈகோ

இப்போது உள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் முந்தைய தளபதிகள் போல இல்லை. ஈகோ பிடித்த நபர். பலமே இல்லாமல் சண்டைக்கு வாடா வாடா என்று கூறுவார்களா.. அடித்தால் காலியாகிவிடுவார்கள் என்ற உடலை வைத்துக்கொண்டு.. குடித்தவுடன் சண்டைக்கு வருவார்களே அப்படித்தான் அசிம் முனீர். இந்தியாவுடன் மோதினாலும் பாகிஸ்தான் தோற்கும் என்று தெரிந்தும் கூட அசிம் முனீர் இந்தியாவுடன் போருக்கு செல்ல முனைப்புடன் இருந்தார்.

மோதல் நடந்தால் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் அதிகாரம் குறையும். ராணுவ தளபதி அசிம் முனீர் பவர் அதிகரிக்கும். அவர் நாட்டையே கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவார். இதை நாம் சொல்லவில்லை. பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானே சொல்கிறார். அசிம் முனீர் தனது தனிப்பட்ட ஈகோ.. தனிப்பட்ட பவரை அதிகரிக்க வேண்டும் என்று இப்படி எல்லாம் அட்டாக் செய்தார்.

ஆனால் இந்தியா அதை எல்லாம் அடித்து உடைத்ததோடு இல்லாமல்.. பாகிஸ்தான் உள்ளேயே போய் தாக்கிவிட்டது. அதோடு அசிம் முனீர் அவ்வளவு பலம் வாய்ந்த தளபதி எல்லாம் இல்லை.. அவருக்கு அவ்வளவு பவர் எல்லாம் இல்லை என்பதை இந்த தாக்குதல் மூலம் இந்தியா வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.. அதோடு பாகிஸ்தானோடு சேர்த்து அவரையும் இந்தியாவிடம் மண்டியிட வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+