அதீத சக்தி வாய்ந்தது! பாகிஸ்தானின் பிரைட் என கூறப்பட்ட ஃபத்தா-1 ஏவுகணையை.. இந்தியா அழித்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானின் பிரைட்.. அதாவது பாகிஸ்தானின் பெருமை என்று அழைக்கப்பட்ட மிக முக்கியமான ஃபத்தா-1 ஏவுகணையை இந்தியா அடித்து காலி செய்துள்ளது. பத்தா-1 ஏவுகணையை.. இந்தியா அழித்தது எப்படி? என்று பார்க்கும் முன் இந்த ஏவுகணையை பற்றி பார்க்கலாம்.

ஃபத்தா-1 ஏவுகணையை வகை: Guided Multi-Launch Rocket System என்று அழைக்கப்படும் ஜிபிஎஸ் மூலம் வழிகாட்டப்பட்ட பல ஏவுகணை ராக்கெட் அமைப்பு (MLRS) ஆகும்

pakistan Jammu Kashmir

வரம்பு: தோராயமாக 140 கி.மீ செல்ல கூடியது.

என்ன செய்யும்: துல்லியமாக, டார்கெட் செய்யப்பட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்தும். தரையில் இருந்து தரையில் உள்ள டார்கெட்டை சென்று தாக்க கூடியது. உதாரணமாக வானத்தில் உள்ளதை தாக்க முடியாது. அதேபோல் இதை விமானம் மூலமும் ஏவ முடியாது. தரையில் இருந்து தரையில் உள்ள டார்கெட்டை சென்று தாக்க கூடியது.

வழிகாட்டுதல் அமைப்பு: மேம்பட்ட துல்லியத்திற்காக GPS/INS ஐப் பயன்படுத்துகிறது

போர்முனை: உயர்-வெடிக்கும் திறன் கொண்ட நவீன குண்டுகளை இதில் வார் ஹெட்டாக பயன்படுத்துவார்கள்.

இயக்கம்: mobile, multi-barrel rocket launcher போன்ற ராக்கெட் ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தியும் ஏவ முடியும்.

முதல் சோதனை: ஜனவரி 2021 இல் நடத்தப்பட்டு வெற்றி பெற்றது.

பயன்பாடு: எதிரி கமாண்ட் சென்டர், தளவாட மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பை குறிவைக்கும் நோக்கம் கொண்டது

உள்நாட்டு மேம்பாடு: பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டது. இது பாகிஸ்தான் இராணுவ ஸ்ட்ராட்டஜிக் படைகள் கட்டளையின் (ASFC) கீழ் நேரடியாக இயக்கப்படுகிறது.

அணுசக்தி அல்ல: வழக்கமான போர்முனைகளை மட்டுமே சுமந்து செல்லும் என்று நம்பப்படுகிறது. குறைந்த இடையிலான அணு ஆயுதங்களையும் பயன்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டாலும் அது உறுதி செய்யப்படவில்லை.

இதை பாகிஸ்தான் தனது பெருமையாக கருதுகிறது. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.

இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது பற்றிய விவரங்கள் ராணுவ பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. மேற்குப் பகுதியில் முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் இருந்து வரும் ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா, Akash Missile System உள்ளிட்ட தடுப்பு அமைப்புகள் முறியடித்தது. ஆனால் என்ன மாதிரியான ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இதில் பயன்படுத்தப்பட்டன என்ற முழு விபரங்கள் வெளியாகவில்லை.

இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலை ஏற்கனவே எதிர்பார்த்த இந்தியா.. multi-layered air defence network எனப்படும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பு முழுமையாக செயல்படுத்தி உள்ளது. அதாவது போர் விமானங்கள் ரோந்து செல்வது.. ஹெலிகாப்டர்கள் தாழ்வாக ரோந்து செல்வது, ட்ரோன்கள் ஏவுகணைகளுடன் தயாராக இருப்பது, எஸ் 400 , Akash Missile System போன்ற ஏவுகணை மற்றும் ஏவுகணை மறிப்பு சிஸ்டங்கள் தயார் நிலையில் இருப்பது என்று பல கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அது எல்லாம் இப்போது கைகொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+