பெரிய "தலையை" களமிறக்கிய எடப்பாடி.. என்ன காரணங்க? நீதிபதி கேட்ட "அந்த" கேள்வி.. பயங்கர ட்விஸ்ட்
டெல்லி: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எப்படி தேர்வு செய்யப்பட்டனர், ஓபிஎஸ் எப்படி நீக்கப்பட்டார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மஹேஸ்வரி , ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு கிளைமேக்ஸை எட்டிவிட்டது. இன்றோடு வழக்கில் விசாரணை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழு வழக்கில் இன்றோடு அனைத்து தரப்பு வாதங்களும் முடியும். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வாதம் முடிந்த நிலையில் இன்று அதிமுக தரப்பு வாதம் வைக்கப்பட உள்ளது. அதேபோல் அவைத்தலைவர் சார்பாகவும் வாதம் வைக்கப்படுகிறது.

நீதிபதிகள்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எப்படி தேர்வு செய்யப்பட்டனர், ஓபிஎஸ் எப்படி நீக்கப்பட்டார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மஹேஸ்வரி , ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் எழுப்பிய கேள்வியில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறது. இந்த பதவிகள் தேர்தல் முறைப்படி தேர்வு செய்யப்பட்டதா. அவர்களுக்கு தேர்தல் நடந்ததா? அவர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டனர். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் எப்படி நீக்கப்பட்டார்.. பொதுக்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஓபிஎஸ் எப்படி நீக்கப்பட்டார் என்றும் கேள்வி கேட்டனர்.

பதில்
இதற்கு அதிமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதிமுக தரப்பில் வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் இன்று ஆஜரானார். அவர் தனது வாதத்தில், பொதுக்குழு உட்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. பொதுக்குழு எடுக்கும் முடிவுகளை உறுப்பினர்கள் ஏற்க வேண்டும். பொதுக்குழு முடிவை ஏற்காத நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படலாம். அதன் அடிப்படையில்தான் ஓ பன்னீர்செல்வம் தீர்மானம் இன்றி நீக்கப்பட்டார். பொதுக்குழு விதிப்படிதான் நடந்தது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தோம். இந்த அழைப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும்.

ஓபிஎஸ் தெரியும்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் எல்லாம் நடக்க வில்லை. இதனால் தேர்தல் இல்லாமல் போட்டியின்றி வென்றனர். தேர்தலே கட்சியில் நடக்கவில்லை. 1.5 கோடி பேர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யவில்லை. ஓபிஎஸ் தனக்கு மட்டும் தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்கிறார் அது உண்மையா. அதற்கான ஆதாரம் இருக்கிறதா? அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

எதிர்க்கட்சி
எதிர்க்கட்சியாக எங்களால் சரியாக செயல்படவில்லை. கட்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கட்சியின் விதிகள் எந்த ஒரு இடத்திலும் மீறப்படவில்லை அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போய் உள்ளது. பணிகளை செய்ய முடியவில்லை. இவ்விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நீதிமன்றத்திலும் இந்திய தலைமைதேர்தல் ஆணையத்திலும் தவறான தகவல்களை ஓபிஎஸ் கொடுத்து வருகிறார். ஓபிசை நீக்க வேண்டும் என்பது அதிமுக பொதுகுழு அஜெண்டாவில் ஒன்றாக இல்லை.பின் அதனை எப்படி செய்தீர்கள், என்று அதிமுக தரப்பு வாதம் வைத்து உள்ளது. இதையடுத்து அவைத்தலைவர் முகுல் ரோத்தகி தற்போது வாதம் வைத்து வருகிறார்.

முகுல் ரோத்தகி
இந்த முறை வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பெரிய டீமையே களமிறக்கி உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் பல மூத்த வழக்கறிஞர்கள் எடப்பாடிக்காக களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் எடப்பாடிக்கு ஆதரவாக அவைத்தலைவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராக இருக்கிறார். முகுல் ரோத்தகி மிக முக்கியமான கேஸ்களில் மட்டுமே ஆஜராவது வழக்கம். இந்த நிலையில் அவரை எடப்பாடி களமிறக்கி உள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. முகுல் ரோத்தகி இதில் அதிமுக அவைத்தலைவர் தரப்பு வழக்கறிஞர் என்ற பெயரில் ஆஜராக உள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications