பாஜகவில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வது இப்படித்தான்.. சீக்ரெட்டை உடைத்த ஜேபி நட்டா!
டெல்லி: பாஜகவில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யப்படுவது எப்படி என்பது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா விளக்கியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மிசோரம் தவிர ஏனைய மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்தது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரையிறுதி போல கருதப்பட்ட இந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றது அக்கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்தது. இருந்தாலும் வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய பாஜக படாத பாடு பட்டது. ஒருவாரம் ஆன பிறகுதான் முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்தது.
ஜே பி நட்டா பேட்டி: மூன்று மாநிலங்களிலுமே பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவித்ததுமே பலருக்கும் வியப்புதான் ஏற்பட்டது. ஏனெனில், மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே உள்பட பல பிரபலமான செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருந்தாலும் மூன்று மாநிலங்களிலுமே கட்சியினருக்கு கூட அதிக பரிட்சயம் இல்லாதவர்களை முதல்வராக அறிவித்தது. இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜகவில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யப்படுவது எப்படி என்பது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா விளக்கியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜேபி நட்டா கூறியதாவது:- பாஜகவில் கட்சியினர் அனைவரும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்களின் பின்னணி, கட்சி நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கண்காணிப்போம்.
3 மாநில முதல்வர்கள் தேர்வு: எங்கள் வசம் மிகப்பெரிய அளவில் டேட்டாக்கள் உள்ளன. அவற்றை அவ்வப்போது ஆய்வு செய்வோம். தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தது முதலே, நமது லீடர் யார், ஆட்சியில் இருந்தாலோ.. எதிர்க்கட்சியாக இருந்தாலோ யார் நமக்கு நல்ல தலைவராக இருப்பார்கள் என ஆராய்ந்து அது குறித்த நடைமுறைகளை அப்போதே தொடங்கிவிடுவோம்.
இது தொடர்ச்சியான நடைமுறை. தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த நடைமுறை இன்னும் தீவிரப்படுத்தப்படும். தீவிர ஆலோசனை இருக்கும். கேபினட் தேர்வுக்கும் இதே முறையைத்தான் பின்பற்றுவோம். இவ்வாறு ஜே பி நட்டா கூறினார். மேலும், தற்போதைய 3 மாநில முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்தும் ஜே பி நட்டா கூறியுள்ளார்.
பழங்குடியினருக்கு உயர் பொறுப்பு: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முறையே விஷ்னு தியோ சாய், மோகன் யாதவ் மற்றும் பஜன்லால் சர்மா ஆகியோர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து ஜேபி நட்டா கூறுகையில், "விஷ்னு தியோ சாய் மிகவும் அனுபவம் மிக்கவர். சத்தீஷ்கரில் அரசியல் கட்சிகளுக்கு பழங்குடியின தலைவரை உயர் பொறுப்புக்கு கொண்டு வர எந்தக் கட்சிக்கும் துணிச்சல் இல்லை. ஆகவே நாங்கள் அதை செய்து காட்டினோம்.
மோகன்லால் யாதவை பொறுத்தவரை அவர் பெரிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ் என்பதே எங்களின் கொள்கை. இதை நாங்கள் எழுத்திலும் உணர்விலும் செயல்படுத்துகிறோம். ஒரு சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வாய்ப்பு. நாங்கள் அதை செய்கிறோம். இவ்வாறு ஜே பி நட்டா கூறினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications