பாகிஸ்தானை முட்டாளாக்கிய இந்தியா.. ரபேல் போர் விமானத்தின் மாஸ்டர் டெக்னிக்..மிரண்டுபோன அமெரிக்கா!
நியூயார்க்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து நம் நாடு தாக்குதலை நிறுத்தியது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து நம் நாட்டின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக மார்தட்டி வரும் நிலையில் அதில் உண்மை இல்லை. இந்தியா மீண்டும் பாகிஸ்தானை முட்டாளக்காகி உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவின் நம் நாட்டின் ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை. இந்தியா ஏஐ உதவியுடன் எக்ஸ் கார்டு கருவியை பயன்படுத்தி பாகிஸ்தானை ஏமாற்றி உள்ளது என்று மெரிக்கா விமானப்படையின் விமானி பரபரப்பாத கவல்லை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பதிலடி கொடுத்தது. மே மாதம் 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை பாகிஸ்தான் மீது நம் நாட்டின் போர் விமானங்களில் இருந்து ஏவுகணைகள் அனுப்பி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தது.

நம் நாட்டின் துல்லியமான தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ படை தளங்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் முயற்சிகள் வானிலேயே முறியடிக்கப்பட்டன. அந்த நாட்டின் போர் விமானம், ஏவுகணைகள், ட்ரோன்கள் அனைத்தும் வானிலையே சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் வேறு வழியின்றி நம் நாட்டிடம் சரணடைந்தது. எங்களை அடிக்காதீங்க எனக்கூறி நம்மிடம் மண்டியிட்டது. இதையடுத்து நம் நாடும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்பறது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது. இப்படி கெஞ்சி போரை நிறுத்திய பாகிஸ்தான் அதன்பிறகு டோனை மாற்றியது. போரில் இந்தியாவை வீழ்த்திவிட்டோம். இந்தியாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். இந்தியாவின் 3 ரஃபேல் போர் விமானங்கள் உள்பட 6 போர் விமானங்களை சுட்டு தள்ளிவிட்டோம் என்று தம்பட்டம் அடித்து கொண்டது.
ஆனால் அதனை நம் நாடு மறுத்தது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள், ‛‛போர் என்று வந்துவிட்டால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் போருக்கான நோக்கத்தை சரியாக நிறைவேற்றிவிட்டோம். அதேவேளையில் பாகிஸ்தான் சொல்வதில் துளியும் உண்மை இல்லை'' என தெரிவித்துள்ளனர். இருப்பினும் நம் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன? என்பது பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில் நம் நாட்டை விட பாகிஸ்தான் தான் அதிக சேதத்தை எதிர்கொண்டது. பயங்கரவாதிகளின் 9 முகாம்கள், ராணுவ தளங்கள், விமானதளங்கள் உள்பட 12 முக்கிய இடங்களை நம் நாடு அழித்தது.
அதேவேளையில் பாகிஸ்தான் நம் நாட்டின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் உண்மையில் பாகிஸ்தான் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா? இல்லையா? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ஏஐ உதவியுடன் பாகிஸ்தானை நம் நாடு முட்டாளாக்கி ரஃபேல் போர் விமானங்கள் மூலம் இலக்குகளை துல்லியமாக அழித்தது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை வெளியே வராத இந்த விஷயம் பற்றி அமெரிக்க விமானப்படையை சேர்ந்த எப்-15இ மற்றும் எப்-16 போர் விமானங்களின் பைலட்டான ரியான் போடன் ஹைமர் என்பவர் தான் முதல் முறையாக பேசி இருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது:
‛‛பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா பயன்படுத்திய ஏஐ தொழில்நுட்ப கருவி மிகப்பெரிய திருப்பு முனை. இப்படியொரு சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகம் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இந்தியா ரஃபேல் போர் விமானத்தின் எக்ஸ் கார்ட் கருவியை திறம்பட பயன்படுத்தி உள்ளது. இருந்த எக்ஸ் கார்ட் என்ற தந்திரமான கருவி பாகிஸ்தானையும், சீனாவின் ஆயுதங்களையும் முட்டாள் ஆக்கி விட்டது. மிகவும் தந்திரமாக அந்த கருவி செயல்பட்டது. சண்டையின் போது ரபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் சீனாவின்ஜே-10சி போர் விமானங்களையும், வானத்தில் இருந்து வானத்தில் வரும் இலக்கை தாக்கும் பிஎல்-15இ ஏவுகணையையும் பயன்படுத்தியது.
ஆனால் ரஃபேல் விமானத்தின் ரேடார் சிக்னலை நகல் எடுத்த எக்ஸ் கார்ட் கருவி சாதூரியமாக பாகிஸ்தான் பயன்படுத்தும் சீனாவின் ஆயுதங்களை குழப்பிவிட்டது.உண்மையான ரபேல் போர் விமானம் எது என்று தெரியாமல் ஜே-10சி போர் விமானத்தில் இருந்த கேஎல்ஜே-7ஏ ரேடார் குழம்பியது. இதனால் தான் ஒரு ரபேல் போர் விமானத்தை கூட பாகிஸ்தானால் சுட முடியவில்லை. அதே நேரம் ரபேலை சுட்டது போன்ற ஒரு எண்ணத்தை எக்ஸ் கார்டின் தந்திரம் உருவாக்க வைத்திருக்கிறது.
சண்டையில் ஒரு ரஃபேல் போர் விமானத்தை கூட இந்தியா இழக்கவில்லை என்பது தான் உண்மை ., ரஃபேல் போர் விமானம் என்று கருதி, அதில் இருந்து இயக்கப்பட்ட எக்ஸ் கார்டை பாகிஸ்தான் சுட்டு இருக்கலாம். அதை சுட்டு விட்டு தான் ரபேல் போர் விமானத்தையே சுட்டு விட்டோம் என்று பாகிஸ்தான் கூறுகிறது'' என்று கூறியுள்ளார். நம்நாட்டின் இந்த புதிய செயல்பாட்டால் தற்போது அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் வியந்துள்ளன.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். ரஃபேல் போர் விமானத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய எக்ஸ் கார்டு (X GUARD) என்பது என்ன? அது எப்படி செயல்படும் என்ற கேள்வி வரலாம். அதற்கு விடையை சொல்கிறோம். நம் நாடு பயன்படுத்தும் ரஃபேல் போர் விமானங்களை நாம் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கினோம்.
பிரான்ஸ் நாட்டின் ‛டசால்ட் அவியேஷன்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது 4.5ம் தலைமுறை விமானமாகும். நம் நாட்டிடம் இருக்கும் தொழில்நுட்ப ரீதியான அதிக திறன் கொண்ட விமானம் இதுவாகும்.
இந்த விமானத்தில் ஏஐ உதவியுடன் இயங்கும் எக்ஸ் கார்ட் (X-GUARD) என்ற கருவி உள்ளது. இது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடியது. இதன் எடை வெறும் 30 கிலோ தான். இது ரபேல் போர் விமானத்தின் ஒரு பெட்டிக்குள் இருக்கும். எப்போது அச்சுறுத்தல் வருகிறதோ, அப்போது எக்ஸ் கார்ட் கருவியை பைலட் ரஃபேல் விமானத்தில் இருந்து வெளியே வரும்படி செய்வார். . அதாவது ரஃபேல் போர் விமானத்தை நோக்கி எதிரிகளின் ஏவுகணைகள் வரும்போது அதில் இருந்து தப்பிக்க இந்த கருவி உதவும்.
இந்த எக்ஸ் கார்டு ரஃபேல் விமானத்தின் ரேடார் சிக்னலுடன் செயல்படும். வெளிவரும் இந்த எக்ஸ் கார்டு கருவி விமானத்தில் இருந்து 100 மீட்டர் பைபர் ஆப்டிக் கேபிள் உதவியுடன் இன்னொரு போர் விமானம் போல் செயல்படும். ரஃபேல் போர் விமானத்தை பின்னால் 100 மீட்டர் இடைவெளியில் இது பறக்கும்.
இந்த வேலைகள் அனைத்தும் வெறும் 2 நொடிக்குள் நடந்து விடும். எக்ஸ் கார்ட் கருவியில் இருந்து 500 வாட் சக்தி கொண்ட ஜாமிங் சிக்னல் 360 டிகிரி கோணத்திலும் வெளிப்படும். விமானத்தில் இருந்து 100 மீட்டருக்கு பின்னால் பறந்து வரும் இந்த கருவி, விமானத்தின் ரேடார் சிக்னலை நகல் எடுத்துக்கொள்ளும். இது தான் முக்கிய அம்சம். இதனால் எதிரிகளின் ரேடாரால் உண்மையான போர் விமானம் எங்கே பறக்கிறது என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படும். இதனால் எதிரிகளின் ரோடார் முதல் ஏவுகணைகள் வரை அனைத்தும் குழம்பும். தற்போது பாகிஸ்தான் இந்த எக்ஸ் கார்டு கருவியை தான் சுட்டு வீழ்த்திவிட்டு ரஃபேலை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க விமானப்படையை சேர்ந்த பைலட்டான ரியான் போடன் ஹைமர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications