சுங்கச்சாவடிகள் இனி இருக்காது.. மத்திய அரசின் ஓபியூ தொழில் நுட்பம் எப்படி.. யாருக்கெல்லாம் லாபம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓபியூ எனப்படும் ஒரே ஒரு கருவியை வாகனத்தில் பொருத்திவிட்டால் போதும், வரும் காலத்தில் சுங்கச்சாவடிகள் என்பதே இல்லாமல் போகும்.. குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பத்தில் செயல்படும் ஓபியூ கருவி எப்படி வேலை செய்யும்.. இந்த புதிய தொழில் நுட்பம் யாருக்கு எல்லாம் லாபம்.. இந்த தொழில் நுட்பம் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏன் என்பதை பார்ப்போம்.

நாட்டின் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நாட்டின் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாறிவிட்டன.அங்கு ஒவ்வொரு 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பெரிய நகரங்கள் வருகிறது என்றால் வெறும் 40 முதல் 45 கிலோ மீட்டர் தூரத்தில் கூட சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திதான் பயணிக்க முடியும் என்ற நிலை இப்போது உள்ளது.

central govt notification toll gate national high way

முன்பெல்லாம் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதனால் சுங்கச்சாவடிகளில் நேர விரயம் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று தீர்வை யோசித்த மத்திய அரசு, 'பாஸ்டேக்' முறையை அமலுக்கு கொண்டு வந்தது. இதன்படி ஸ்டிக்கர் போல் ஒன்றை வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அந்த ஸ்டிக்கர் தான் பாஸ்டேக்.

அது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் இருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும். இந்த சிஸ்டம் ஓரளவு கூட்டத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனாலும் ஒரே நேரத்தில் வாகனங்கள் அதிக அளவு வரும் போது, சுங்கச்சாவடிகளில் நீண்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி ஸ்கேன் செய்து கட்டணத்தை வசூலிக்கும் முறைக்கு பதில், செயற்கை கோள் தொழில் நுட்பத்தில் புதிய கட்டண முறையை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வந்தது.

குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் : அதன்படி 'பாஸ்டேக்' முறைக்கு பதில் செயற்கைக்கோள் அடிப்படையிலான 'குளோபல் நேவிகேஷன் சாட்டலைட் சிஸ்டம்' (ஜி.என்.எஸ்.எஸ்.) என்ற பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவரப்போகிறது. இந்த புதிய முறை குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் என்று கடந்த ஜூலை மாதம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்து. அதன்படியே பெங்களூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவிலும், அரியானா மாநிலத்தில் பானிபட்-ஹிசார் பிரிவிலும் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய முறை, நாடு முழுவதும் சில நெடுஞ்சாலைகளிலும், விரைவுச்சாலைகளிலும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்திருக்கிறது இதற்காக 2008-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

ஓ.பி.யு. கருவி எப்படி: மத்திய அரசு விரும்பும் 'குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' வேலை செய்ய ஓபியூ (ovum pick-up) என்ற கருவியை பொறுத்த வேண்டும். அதாவது செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு. கருவியை வாகனங்களின் வெளிப்புறத்தில் பொருத்தப்படும். இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும் போது, நாள் ஒன்றுக்கு முதல் 20 கி.மீ.க்கு கட்டணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுங்க கட்டணம்: அதன்பிறகு பயணிக்கும் தூரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, 'பாஸ்டேக்' போலவே வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் ஆட்டோமேட்டிக்காக பிடித்தம் செய்யப்படும். ஓ.பி.யு. கருவி வாயிலாக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் துள்ளியமாக கணக்கிடப்படும். குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

கட்டணம் இல்லை: இந்த ஓ.பி.யு. கருவி அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும்போது சுங்கச்சாவடிகள் இந்தியாவில் தேவையற்றதாக மாறிவிடும். அதேபோல் சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி வசிக்கும் மக்கள் தினமும் 20 கி.மீ.வரை கட்டணமின்றி சென்றுவரலாம். பாஸ்டேக் போலவே, ஓ.பி.யு. சாதனத்தை அரசு இணையதளங்களில் வாங்கி கொள்ள முடியும். ஓபியூ கருவி பொறுத்தப்பட்டால், ஒரு சிறப்பு அம்சம் உள்ளது..

யாருக்கு லாபம்: முன்பெல்லாம் வண்டியை எடுத்து 10 கிலோ மீட்டர் போகும் போதே டோல்கேட் காரணமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.. இனிமேல் அப்படி இல்லை.. அங்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருக்காது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கிறது என்பதை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், கண்டிப்பாக மத்திய அரசுக்கு இந்த திட்டத்தால் பெரிய லாபம் தான் ஏற்படும். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுமானால் திட்டம் ஓரளவு பயனளிக்கக்கூடியதாக இருக்கும். மாறாக பெரிய வாகனங்களுக்கு இந்த திட்டம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+