கிட்ட நெருங்கிய போலீஸ்! கடைசி நொடியில் பைக்கில் ஏறி எஸ்கேப்பான காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்! பரபர

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங்கை பிடிக்கும் நடவடிக்கையில் அம்மாநில போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனிடையே அவர் நேற்று எப்படித் தப்பிச் சென்றார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்சாபைத் தனி நாடாகப் பிரித்து, காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை சில பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் ஆயுதம் ஏந்தி தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் காலிஸ்தான் அமைப்புகளுக்குத் தடை இல்லை. இதனால் வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இதற்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

 காலிஸ்தான் பிரிவினைவாதி

காலிஸ்தான் பிரிவினைவாதி

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகின்றனர். அதன்படி 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவராக அம்ரித் பால் சிங் இருக்கிறார். இவரது உதவியாளர் ஒருவர் கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஆதரவாளர்களுடன் அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். இது அப்போதே பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்ட நிலையில், அப்போது நிலைமை சமாளிக்க அம்ரித் பால் சிங் உதவியாளர் விடுவிக்கப்பட்டார்.

 அம்ரித் பால் சிங்

அம்ரித் பால் சிங்

இருப்பினும், அப்போது முதலே அம்ரித் பால் சிங்கை போலீசார் தொடர்ந்து கண்காணித்தே வந்தனர். அவரை கைது செய்ய முடிவு செய்த பஞ்சாப் போலீசார் நேற்று அதிரடி ஆப்ரேஷனை தொடங்கினர். இப்போது வரை வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த 78 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணைக்காகப் பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இப்போது வரை முக்கிய தலைவரான அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீசாரல் கைது செய்ய முடியவில்லை.

 அதிரடி கைது

அதிரடி கைது

இதையடுத்து அவரை தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பஞ்சாப் போலீசார் கைது செய்தவர்களில் 6 முதல் 7 பேர் அமிர்தபால் சிங்கின் பாதுகாவலர்கள் ஆவர். அதேபோல அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளும் நிதி சார்ந்த விஷயங்களை கையாள்பவருமான தல்ஜீத் சிங் கல்சி என்பவரையும் ஹரியானாவின் குர்கானில் போலீசார் கைது செய்தனர். அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் பக்காவாக திட்டமிட்டிருந்தனர். அதற்காக ​​ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 எஸ்கேப் ஆனது எப்படி

எஸ்கேப் ஆனது எப்படி

நேற்று ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்குச் சென்று அம்ரித் பால் சென்று கொண்டிருந்த போது, தனிப்படை போலீசார் அவரை பின்தொடர்ந்தனர் . போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ய நெருங்கிய போது, சினிமா பாணியில் அவர் அங்கிருந்த பைக்கில் ஏறித் தப்பியோடிவிட்டார். இதையடுத்து தப்பியோடிய அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இருப்பினும், போலீசாரால் இதுவரை அவர் மறைந்திருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்ய முடியவில்லை. அம்ரித் பாலை கைது செய்யும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

 இணையச் சேவை முடக்கம்

இணையச் சேவை முடக்கம்

இதன் காரணமாகப் பஞ்சாப் மாநிலம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் துரத்திய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி வரை இணையச் சேவை முடக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் அவரை கைது செய்யாத நிலையில், இணையச் சேவை முடக்கம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

அமிர்தசரஸில் உள்ள அம்ரித்பால் சிங்கின் கிராமமான ஜல்லுபூர் கைராவிற்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக கடந்த மார்ச் 2ஆம் தேதியே நடந்த கூட்டத்தில் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் திட்டம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உள்துறை அமைச்சர் அமித்துடன் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிக்க மத்திய அரசும் கூடுதல் படைகளைப் பஞ்சாபிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+