திமுகவை விட அதிகம்.. லாட்டரி மார்ட்டின் எந்த கட்சிக்கு அதிக நன்கொடை.. லிஸ்டில் பாஜக, திரிணாமுல்
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் குறித்து முழு தகவல்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில்,, இதில் லாட்டரி அதிபர் மார்டினின் நிறுவனம் எந்தக் கட்சிக்கு எத்தனை நன்கொடை கொடுத்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையைக் கடந்த 2019ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அப்போது முதலே இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பலரும் விமர்சித்தனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் பத்திர முறை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், எந்தக் கட்சிக்கு எத்தனை நன்கொடை சென்றுள்ளது என்பது குறித்த தகவல்களைப் பகிரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள்: இதையடுத்து அந்த தகவல் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்ச தொகை நன்கொடை அளித்தவராகக் கோவையைச் சேர்ந்த லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இருக்கிறது. லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் தான் இது. இவர் பல்வேறு கட்சிகளுக்கும் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்துள்ளார்.
அதிகபட்சமாக அவர் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் ரூ. 542 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து திமுகவுக்கு அவர் ரூ.503 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.154 கோடி நன்கொடை அளித்துள்ள நிலையில், மத்திய பாஜகவுக்கு அவர் ரூ.100 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
யாருக்கு எவ்வளவு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி அளித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று தனது இணையதளத்தில் பகிர்ந்த நிலையில், இதில் தான் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான இந்த புதிய தரவுகளில் தேர்தல் பத்திர எண் இருக்கிறது. இதன் மூலம் தேர்தல் பத்திரத்தை யார் வாங்கினார். அவர் அதை யாருக்குக் கொடுத்தார் என்பது எளிதாகக் கண்டறியலாம்.
'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டின் நடத்தும் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் கடந்த 2019 முதல் 2024 வரை ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் திமுகவுக்கு அளித்த நன்கொடை விவரங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், அவர்கள் திமுகவுக்கு மட்டும் நன்கொடை தரவில்லை. பல்வேறு கட்சிகளுக்கும் கூட நன்கொடை கொடுத்துள்ளது இதில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு கட்சிகளுக்கும் இவர்கள் மிகப் பெரியளவில் நன்கொடை அளித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸுக்கு தான் இவர்கள் அதிகபட்ச தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர். அங்கே அவர்கள் டியர் லாட்டரி என்ற லாட்டரி விளையாட்டை நடத்தி வருகிறார். மார்ட்டின் நிறுவனம் இந்த கட்சிகளுக்கு மட்டுமின்றி காங்கிரஸ் மற்றும் சிக்கிம் சார்ந்த கட்சிகளுக்கும் தலா ரூ. 50 கோடி நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications