புதிய இந்தியாவை செதுக்கும் பிரதமர் மோடி.. 100 எபிசோடை கடந்த ‛மன் கி பாத்’ புத்தகம் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ‛மன் கி பாத்' நிகழ்ச்சி 100 எபிசோடை கடந்து வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் 100வது எபிசோடை கொண்டாடும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி ‛மன் கி பாத்' நிகழ்ச்சி வழியாக மேற்கொண்ட பணிகள் என்னென்ன என்பது பற்றிய 3வது புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மாடி மாதம் ஒருமுறை ‛மனதின் குரல்' எனும் ‛மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் வாணொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடந்து வருகிறது. மோடி பிரதமராக பதவியேற்ற 2014 முதல் இது தொடங்கி நடந்து வருகிறது.

 How PM Modis Mann Ki Baat Shaped New India 3rd new book called Igniting Collective Goodness explores

இந்த நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்தில் சமூக சேவைகளில் சிறப்பாக செயல்படுவோர், சமூக சேவை செய்யும் அமைப்பினர் குறித்து பேசி பாராட்டி வருகிறார். மேலும் மக்கள் செய்ய வேண்டிய செயல்கள் பற்றியும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அவர் கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

100 எபிசோட் நிறைவு: இந்நிலையில் தான் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 100வது ‛மன் கி பாத்' நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதனை பாஜகவினர் சிறப்பாக கொண்டாடினர். அதோடு பிரதமர் மோடியின் ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் முதல் 100 அத்தியாயங்களை கொண்டும் வகையில் ‛புளூ கிராஃப்ட் டிஜிட்டல்' அறக்கட்டளை சார்பில் ‛‛இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: மன் கி பாத் @ 100'' (Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100 'என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. முதல் 100 நிகழ்ச்சி தொடர்பான 3வது புத்தகம் இதுவாகும்.

3வது புத்தகம்: அதாவது ‛மன் கி பாத்' நிகழ்ச்சியின் முதல் 26 நிகழ்ச்சிகள் குறித்த முதல் புத்தகம் கடந்த 2017 மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். அதன்பிறகு 2வது புத்தகத்தை மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 2019 மார்ச் மாதம் வெளியிட்டார். இந்த புத்தகம் 50 வது ‛மன் கி பாத்' நிகழ்ச்சியின் வெற்றியை கொண்டாடடும் வகையில் வெளியிடப்பட்டது. தற்போது 100 வது ‛மன் கி பாத்' நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த 3வது புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி முன்னுரை: இந்த புத்தகத்துக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ளார். அதில், மன் கி பாத் என்பது ஒரு வானொலி நிகழ்ச்சி மட்டுமின்றி நாட்டின் குரல்களுக்கு மேடையாக மாறியுள்ளது பற்றி எழுதி இருக்கிறார். அதில் அரசியல், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றில் இருந்து எழுச்சியூட்டிம் வகையிலான மனிதர்களின் வாழ்க்கை கதைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி மாறியுள்ளது. என தெரிவித்துள்ளார்.

வரலாற்று ஆவணம்: மேலும் இந்த புத்தகம் என்பது ‛மன் கி பாத்' சாதாரண மக்களுக்கான ஆதரவு குரலை எப்படி உயர்த்துகிறது என்பதை ஆராயும் கட்டுரை, கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்த புத்தகம் வருங்கால தலைமுறை, எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு வரலாற்று ஆவணமாக இருக்கும் வகையில் உருவாக்க்பட்டுள்ளது. சாதாரண மக்கள் எப்படி தலைவருடன் உரையாடினார்கள் என்பது பற்றிய விபரம் இடம் பெற்றுள்ளது.

4 பிரிவுகள்: மேலும் இந்த புத்தகம் என்பது 19 அத்தியாயங்களை கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய கருப்பொருட்களான சமூக மாற்றம், இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மை, ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (Statistics), வியூகங்கள்(Strategies) என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம், பெண்களுக்கான அதிகாரம், நீர் பாதுகாப்பு, தூய்மை, தன்னம்பிக்கை, அறிவியல், சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு எனப் பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கி உள்ளது. இவை அனைத்தும் பிரதமர் மோடியின் உரையாடல் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்: தற்போது இந்த புத்தகம் மத்திய அமைச்சர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்திய மக்களுடன் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதை "இக்னிட்டிங் கலெக்டிவ் குட்னஸ்: மன் கி பாத் @ 100' புத்தம் பிரதிபலிக்கிறது. நாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகிறார். இந்த புத்தகம் நமது ஒருங்கிணைந்த பயணத்தை படம் பிடித்து காட்டுகிறது. மக்களின் உண்மையான உணர்வை எடுத்து கூறுகிறது. அதோடு 'புதிய இந்தியாவை' உருவாக்குவதில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்கும் இளைஞர்கள் படிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

அமித்ஷா: அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மன் கி பாத் 100வது எபிசோடை கடந்த நிலையில் மாற்றம் வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க விரும்பும் இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்த புத்தகத்தின் வெளியீட்டாளரான ப்ளூகிராப்ட்டுக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ‛‛சமகால வெகுஜன இயக்கம் தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ "மன் கி பாத்" புத்தகத்தின் நகல் கிடைத்தது. ஏப்ரல் 23ல் 100 எபிசோட்களை எட்டிய மன் கிபாத் நிகழ்ச்சி என்பது ஆல் இந்திய ரேடியோவின் குறிப்பிடும்படியான பயணமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நாட்டை கட்டியெழுப்பும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது'' என தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஒருங்கிணைப்பு என்பது தீர்ப்பு, தீர்மானம் மற்றும் முடிவுகளை உள்ளிட்டவற்றை சேர்ந்த கலவையாக உள்ளது. மக்களுக்கும், பிரதமருக்கும் இடையேயான உரையாடல் என்பது கட்டாயம் தேவை. இந்த புத்தகம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் தனித்திறன், அவர்களின் சேவைகள், தியாகம் உள்ளிட்டவற்றின் பயணங்களை கொண்டாடி தீர்க்கிறது'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+