டெல்லி அருகே உருவான திடீர் கோடீஸ்வரன்.. படுக்கை அறையில் கண்ட காட்சி.. ஆடிப்போன போலீஸ்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ராகுல் சவுத்ரி என்பவர் டெல்லி அருகே வீட்டின் படுக்கை அறையில் உயர் ரக கஞ்சா செடிகளை நவீன தொழில் நுட்பத்தில் பயிரிட்டவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்ற ராகுல் சவுத்ரி சிறிய ஓட்டல் நடத்தி வந்தார்.. ஆனால் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், கஞ்சாவை நவீன முறையில் வீட்டில் வளர்த்துள்ளார். ஆனால் வசமாக சிக்கிவிட்டார்... எப்படி என்பதை பார்ப்போம்.
சிலருக்கு வாழ்க்கையில் விரைவாக பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையில் அவர்கள் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் செல்வார்கள்.. உதாரணத்திற்கு திருடுவது, போதைப்பொருட்கள் விற்பது, கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பது, பிறரது சொத்துக்களை ஆக்கிரமித்து விற்பனை செய்வது, பிறரது பேராசைகளை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு பணத்தாசையை காட்டி மொத்தமாக ஏமாற்றுவது, சீட்டு நடத்துவதாக கூறி பணத்தை ஏமாற்றுவது, அதிக வட்டி வருவதாக நம்ப வைத்து, அதற்காக சில மாதங்கள் மட்டும் வட்டி தந்து, ஊர் முழுக்க பணத்தை கடனாக வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆவது இப்படி பல்வேறு வகைகளில் மோசடி செய்வார்கள்.

இதேபோல் போல் சிலர் போதைப்பொருட்களை தயாரித்து விற்று பணம் சம்பாதிக்கவும் ஆசைப்படுவார்கள். அப்படித்தான் ஆசைப்பட்டிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 46 வயதாகும் ராகுல் சவுத்ரி. ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்ற ராகுல், வேலைக்காக டெல்லி அருகே உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் குடியேறினார்.
ராகுல் சவுத்ரி, முதலில் சிறிய ஓட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஆனால் அவர் ஆரம்பித்த காலம் தவறாக இருந்துள்ளது. காற்றாடிக்கும் நேரம் மாவு விற்பதும், மழைக்காலத்தில் உப்பு விற்பதும் எப்படி தவறோ, அதுபோல் கொரோனா காலத்தில் அவர் ஓட்டல் ஆரம்பித்ததும் சோதனைக்காலமாக மாறியது. இதனால் ஓட்டல் தொழிலைவிட்டு வேறு தொழிலை தேடியிருக்கிறார்.
அப்போது அவருக்கு கஞ்சா வளர்க்கும் யோசனை வந்திருக்கிறது. இதற்காக வலைத்தளங்களில் அது தொடர்பான தேடல்களில் இறங்கினார். முடிவில் கலிபோர்னியா கஞ்சாவை நவீன முறையில் வீட்டில் வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். இதற்காக நொய்டா பார்ஸ்வநாத் பனோரமா குடியிருப்பில் 10 மாடி கட்டிடம் ஒன்றில் 3 படுக்கை அறைகளுடன் கூடிய மேல்மாடி வீட்டை (பென்ட் ஹவுஸ்) வாடகைக்கு எடுத்தார். அந்த வீட்டின் மாத வாடகை சுமார் ரூ.45 ஆயிரம் ஆகும்.
கஞ்சா விற்க வேண்டும் என்றால், கஞ்சா விதைகளை வாங்க வேண்டும்.. அதை எப்படி வாங்குவது என்று யோசித்த ராகுல், 'டார்க் வெப்' எனப்படும் சட்டவிரோத இணைய தளம் மூலம், ரூ.6 லட்சத்துக்கு உயர் ரக கஞ்சா விதைகளை ராகுல் சவுத்ரி வாங்கியிருக்கறிர். பின்னர் அவற்றை அங்கு 50-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் சாகுபடி செய்தார். இந்த செடிகள் அனைத்தையும் தனது வீட்டின் படுக்கை அறையிலேயே வைத்திருக்கிறார்.
கஞ்சா செடிகள் வீட்டுக்குள் இருப்பதால், சூரிய ஒளிக்காக ஸ்பெக்ட்ரம் விளக்குகளை பயன்படுத்தினார். அறையின் வெப்பநிலை 24 முதல் 27 டிகிரி அளவுக்கு இருக்க குளர்சாதன வசதியையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இவருக்கு கஞ்சா செடியை வளர்க்க ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டுள்ளது. அவை நன்றாக வளர்ந்த பிறகு, பல ஆயிரம் ரூபாய்க்கு அவற்றை விற்பனையும் செய்து வந்துள்ளார்.. 'டார்க் வெப்' தளங்கள் மூலமே ராகுல் சவுத்ரி கஞ்சாவை பலருக்கு விற்றுவந்தார்.
மிகக் குறுகிய காலத்தில் ராகுல் சவுத்ரி பெரிய பணக்காரராக மாறினார்.ஒரு கட்டத்தில் அவரைப்பற்றிய தகவல் மெல்ல மெல்ல அக்கம்ப பக்கம் பரவியது. இறுதியில் அவரை பற்றிய தகவல் போலீசாரின் காதுகளுக்கு சென்றது. இதையடுத்து அவரை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், ராகுல் சவுத்ரியை பிடிக்க பொறி வைத்து காத்திருந்தனர். 10 கிராம் கஞ்சா ஆர்டரை ராகுல் சவுத்ரிக்கு வந்தது. இந்த தகவல் போலீசாருக்கும் தெரியவந்தது. கஞ்சாவை விற்க சென்ற ராகுல் சவுத்ரியை பின்தொடர்ந்து சென்ற போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் வீட்டில் கஞ்சா வளர்த்தது தெரியவந்தது.
கைதான ராகுல் சவுத்ரியிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட கஞ்சா செடி தொட்டிகள், 2 கிலோ கஞ்சா, 163 கிராம் உயர் ரக கஞ்சா மற்றும் சாகுபடி உபகரணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என தெரிவித்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications