இன்னும் இரண்டே வாரம் தான் டைம்.. இதை மட்டும் செய்யலேனா.. ஹை வே-இல் வாகனமே ஓட்ட முடியாது.. எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் ஜன. 31ஆம் தேதி முதல் ஃபாஸ்ட் டேக்குகளை செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஃபாஸ்ட் டேக் என்பது சுங்கச்சாவடிகளில் காத்திருந்து கட்டணத்தைச் செலுத்தாமல் அதைக் கடக்கும் போது தானாகப் பணம் செலுத்தும் ஒரு வசதியாகும். இது RFID - ரேடியோ அதிர்வெண் அடையாளம் தொழில்நுட்பம் மூலம் இயங்கும்.

How to avoid as FASTags With Incomplete KYC To Be Deactivated After Jan 31

தானாகச் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்பதால் நாம் லைனில் காத்திருக்கத் தேவையில்லை. கடந்த 2021 பிப். மாதம் பாஸ்ட் டேக்குகள் கட்டாயமாக்கப்பட்டன. பாஸ்ட் டேக்குகள் இல்லையென்றால் சுங்கக் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

எப்படி வாங்கலாம்: இதை நாடு முழுக்க உள்ள வங்கிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து மையங்கள், வங்கிக் கிளைகள் மற்றும் பெட்ரோல் பம்புகள் என 28,000க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் இருந்து வாங்கலாம். இந்த RFID ஸ்டிக்கர் போல கார்களில் ஓட்டப்படும்.. சுங்கச்சாவடிகளில் உள்ள RFID ரீடர்கள் இந்த ஸ்டிக்கரை படித்து தேவையான கட்டணத்தைத் தானாகக் கழிக்கும். டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக இது கருதப்படுகிறது.

குஜராத்தில் "போலி" சுங்கச்சாவடி! வெறும் 1.5 ஆண்டுகளில் பல கோடியை கொள்ளையடித்த கும்பல்! பகீர் பின்னணி

ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் இந்த ஃபாஸ்ட் டேக்குகளை வாங்க முடியும். இரண்டில் எப்படி வாங்கினாலும் கேஒஸ்சி கட்டாயம் தேவை. இந்த ஃபாஸ்ட் டேக்குகளை வாங்க காரின் பதிவுச் சான்றிதழ் (RC), அடையாள அட்டை, முகவரி சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவைப்படும். அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகலை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கேஒய்சி: ஆனால், பலரும் கேஒய்சி பெறாமல் ஃபாஸ்ட் டேக்குகளை வாங்குகிறார்கள். ஆங்கிலத்தில் கேஒய்சி (KYC) எனப்படும் கஸ்டமர் தகவல்களைச் சரிபார்க்காத பாஸ்ட் டேக் கணக்குகளை FASTags செயலிழக்க உள்ளதாக இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜன. 31ஆம் தேதி வரை இதற்கான கேஒய்சி செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

'ஒரு வாகனம், ஒரே ஃபாஸ்டேக்' என்ற முயற்சியின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிலர் பல வாகனங்களுக்கு ஒரே ஃபாஸ் டேக்கை இணைத்துள்ளனர். சிலர் ஒரே வாகனத்தைப் பல ஃபாஸ்ட் டேக்கை இணைத்துள்ளனர். அந்த முறையை நீக்கவே இதை அவர்கள் இதைச் செய்கிறார்கள். அதாவது ஒரு வாகனத்தில் ஒரே ஒரு பாஸ்ட் டேக் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இதைச் செய்துள்ளனர்.

செயலிழக்கும்: பழைய ஃபாஸ்ட் டேக்குகள் அனைத்தும் வரும் ஜனவரி 31ஆம் தேதி செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கேஒய்சி செய்யப்பட்ட ஃபாஸ்ட் டேக்குகள் மட்டுமே வேலை செய்யும்.

குறிப்பிட்ட வாகனத்திற்குப் பல ஃபாஸ்ட் டேக்குகள் வந்துள்ளதாகவும் கேஒய்சி இல்லாமல் பல பாஸ்ட் டேக்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேஒய்சி இல்லாமல் பாஸ்ட் டேக்குகள் வழங்குவதாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறும் செயலாகும். இதன் காரணமாகவே இப்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டறிவது எப்படி: உங்கள் பாஸ்ட் டேக் கேஒய்சி செய்யப்பட்டு இருக்கிறதா.. இல்லையா என்பதைக் கண்டறிய https://fastag.ihmcl.com என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.. அதில் மொபைல் எண், பாஸ்வோர்ட், ஒடிபி போட்டு உள்ளே செல்லுங்கள். அதில் "பை பிரோபைல்" இடத்திற்குச் சென்றால் அங்கே கேஒய்சி நிலை காட்டும். நீண்ட காலமாக கேஒய்சி பேன்டிங் என இருந்தால், மீண்டும் கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பித்து கேஒய்சியை முழுமையாக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+