குள்ளமாக இருக்கிறோம்னு பீல் பண்றீங்களா! 18 வயசுக்கு பிறகும் உயரமாக முடியுமாம்! இதை செய்யுங்க போதும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பலரும் தங்களால் விரும்பிய அளவுக்கு உயரமாக முடியவில்லை என்று பீல் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். 18 வயதான பிறகும் கூட ஒருவரால் உயரமாக முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆனால் அதுதான் உண்மை.. எப்படி என விரிவாகப் பார்க்கலாம்.

இப்போதெல்லாம் நன்கு உயரமாக இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இருப்பினும், அனைவராலும் வளரும் பருவத்தில் நல்ல உயரத்தை அடைய முடிவதில்லை. இதன் காரணமாகவே பலரும் இங்கு பீல் செய்து கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம்.

அதிலும் 18 வயதைக் கடந்துவிட்டால், தங்களால் இனி வளரவே முடியாது என்று அவர்கள் ரொம்ப பீலிங்கில் இருப்பார்கள். ஆனால், உண்மையில் 18 வயதான பிறகும் சில குறிப்பிட்ட விஷயங்களைச் செய்தால் வளர முடியுமாம். அது என்ன என்பதைப் பார்க்கலாம்.

உயரம்

உயரம்

ஆனால், அதற்கு முன்பு ஒருவரின் உயரத்தை எது தீர்மானிக்கிறது என்பதை என்பதைப் பார்க்கலாம். உயரம் என்பது பல்வேறு காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மரபியல் காரணங்கள், அன்றாட உணவு முறை, வாழ்க்கை முறை, ஆக்டிவாக இருப்பது என பல்வேறு காரணங்களின் அடிப்படையில் உயரம் மாறுபடும்.. உங்கள் உயரத்தில் 60-80 சதவிகிதம் மரபணுக்களுடன் தொடர்புடையது. இதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மீதமுள்ள 40-20 சதவீதம் உங்கள் கைகளில் உள்ளது. இதன் மூலம் நாம் அதிகபட்ச உயரத்திற்கு வளர முடியும்

நின்றுவிடும்

நின்றுவிடும்

பெரும்பாலானவர்களுக்கு 18 வயதுக்குப் பிறகு உயரமாக வளர்வது நின்றுவிடும். நாம் வளரும்போது, ​​பருவமடையும் வரை பெரும்பாலானோர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2 அங்குலம் வளர்ச்சியடைகிறார்கள். அதன் பிறகு இளமைப் பருவத்தில் இருந்து 18 வயதாகும் வரை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் உயரம் வளர்க்கிறார்கள். இந்த காலகட்டத்தில், உடல் உயரம் வளர்வது நின்றுவிடுகிறது.

வளர்ச்சி ஏன்

வளர்ச்சி ஏன்

உயரம் அதிகரிப்பதை நிறுத்தும் முக்கிய காரணங்களில் நமது எலும்புகளும் ஒன்றாகும். குறிப்பாக வளர்ச்சித் தட்டுகள் நமது உயரத்துடன் தொடர்புடையது.. இவை குழந்தைகளுக்கு லாங் போன் எனப்படும் நீண்ட எலும்புகளின் முனைகளுக்கு அருகிலுள்ள திசுக்களின் பகுதியில் அமைந்துள்ளன. இவையே பெரும்பாலும் ஒருவரின் உயரத்தைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நீண்ட எலும்பிலும் குறைந்தது இரண்டு வளர்ச்சித் தட்டுகள் உள்ளன.. ஒவ்வொரு முனையிலும் இருக்கும் இவை, நீளமாக இருக்கும். இந்த நீண்ட எலும்புகளின் நீளம் காரணமாகவே நமக்கு வளர்ச்சி ஏற்படுகிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள்

ஆண்கள் மற்றும் பெண்கள்

ஏனெனில் குழந்தைகளுக்கு இந்த வளர்ச்சித் தட்டுகள் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் பருவமடைதல் முடிவடையும் போது, ​​உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.. இதனால் வளர்ச்சித் தட்டுகள் கடினமாகின்றன அல்லது "மூடுகின்றன".. மேலும், எலும்புகளின் நீளம் நிறுத்தப்படும். பொதுவாகப் பெண்களுக்கு 16 வயதுக்கும், ஆண்களுக்கு 14 முதல் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் வளர்ச்சித் தட்டுகள் மூடப்படும்.

என்ன செய்யலாம்

என்ன செய்யலாம்

இதனால் பொதுவாகவே சற்று குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக வேண்டும் என சோகமாவார்கள். ஆனால் கவலைப்பட வேண்டாம்.. உங்கள் வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், உங்கள் உயரத்தை அதிகரிக்க வழிகள் உள்ளன. இருப்பினும், 18 முதல் 20 வயது சமயத்தில் மட்டுமே இது நமக்கு கை கொடுக்கும்... வாழ்நாள் முழுவதும் அல்ல. இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் உயரத்தை அதிகரிக்க நாம் செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன.

சரிவிகித உணவு

சரிவிகித உணவு

குழந்தைகளாக இருந்து வளரும் போது, உடல் அளவு வளர்ந்து, இதயம், மூளை போன்ற பல்வேறு உள் உறுப்புகள் வடிவமைக்கப்படும். இதுபோன்ற காலங்களில் நமக்குப் போதியளவு வைட்டமின்கள் மற்றும் தாதுகளைத் தேவை என்பதால் அதற்கேற்ப சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.. இதனால் குறைபாடும் உயரத்தைப் பாதிக்காது. குறிப்பாக, வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வலுவான எலும்புகளுக்கு மிகவும் முக்கியம்.. நீண்ட எலும்புகள் நமது உடல் உயரத்தை அதிகரிக்கும். இது மட்டுமின்றி பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள்.

புத்தகத்தைப்பிடிக்கக் கூடாது

புத்தகத்தைப்பிடிக்கக் கூடாது

தொடர்ந்து புகைபிடிப்பது உங்கள் உயரத்தைக் குறைக்கும்.. இது உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வளர்ச்சியையும் பாதிக்கலாம். 1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தாய்மார்கள் ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட சிகரெட்டுகளை புகைப்பவர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சி 0.65cm வரை குறைகிறது. சிகரெட் புகைத்தலில் உள்ள நிகோடின் காரணமாக எலும்பு வளர்ச்சியின் போது எண்டோகாண்ட்ரல் ஆசிஃபிகேஷனை மோசமாகப் பாதிக்கிறது. மேலும், புகைபிடிப்பது பசியைக் கட்டுப்படுத்துவதால் போதிய சத்துக்களும் நமக்கு கிடைக்காமல் போகும்.

தூக்கம்

தூக்கம்

இதுவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் நமக்குக் குறைந்தது 6-8 மணி நேரத் தூக்கம் அத்தியாவசியமானது. தூக்க அட்டவணையை ஒழுங்குபடுத்துங்கள்.. ஒழுங்கற்ற தூக்க அட்டவணை, அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்குவது என்பது இளைஞனின் வளர்ச்சியைத் தடுக்கலாம். வளர்ச்சி ஹார்மோன் பொதுவாகத் தூக்கத்தின் போது வெளியிடப்படுகிறது. எனவே, போதியளவுக்கு நாம் தூங்கவில்லை என்றால் வளர்ச்சி ஹார்மோன் கட்டுப்படுத்தப்படும். இதனால் போதியளவுக்கு வளர முடியாது.

நிற்கும் மற்றும் உட்காரும் போஸ்

நிற்கும் மற்றும் உட்காரும் போஸ்

உட்காரும் போது சரியான முறையில் உட்கார வேண்டும். அது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். நிற்கும்போது, உட்காரும் போதும் சரியான முறையில் இருக்க வேண்டும் அப்போது தான் நம்மால் முழுமையான வளர்ச்சியை அடைய முடியும். காலப்போக்கில் நமது மோசமான உட்காரும் மற்றும் நடக்கும் முறை உடலில் தளர்ச்சியை உண்டாக்கும். இதனால் உயரம் பாதிக்கப்படும். வளைந்த தோள்கள், மற்றும் முதுகுத்தண்டு ஆகியவை தளர்வை ஏற்படுத்தும். இதனால் கழுத்து மற்றும் முதுகில் வலி ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+