கொரோனா தடுப்பூசி போடனுமா.. உங்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? ரொம்ப சிம்பிள்தான்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பூசியை நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ போட்டுக் கொள்ள எந்த மாதிரி வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், எப்படி உங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் 2021 ஜனவரியில் தொடங்கும் என்றும், 2021 அக்டோபருக்குள் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் பார்த்தால், ஜனவரி மாதம், தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

How to register to get covid vaccine in India?, a guideline

COVID-19 தடுப்பூசி முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும், அதன்பிறகு நீரிழிவு போன்ற இணை நோய்கள் உள்ள 50 வயதுக்கு குறைவான வயதுள்ளோருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பின்னர்தான், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கொண்டு சென்று சேர்க்கப்படும்.

1. தடுப்பூசி போடும் இடத்தில், முன்பே பதிவுசெய்யப்பட்ட பயனாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அங்கு சென்று பதிவு செய்ய முடியாது.

2. Co-WIN வலைத்தளம் அல்லது Co-WIN என்ற செல்போன் ஆப்பில், சுய பதிவு செய்ய வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 12 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்று பதிவு செய்ய தேவைப்படும்.

  • தடுப்பூசி போடுவதற்கான தேதியை உறுதி செய்ய, நீங்கள் தேவைப்படும் விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • Co-WIN ஆப்பை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யுங்கள். இது இலவசம்தான். அல்லது, Co-WIN வெப்சைட்டுக்கு போய் பதிவு செய்யலாம். ஆனால் இந்த வெப்சைட் இன்னும் செயல்பட தொடங்கவில்லை.
  • விவரங்களை கொடுத்து, அதை சமர்ப்பிக்க வேண்டும்.
  • நீங்கள் தடுப்பூசி போடுவதற்கான தேதி மற்றும் நேரம் அப்போது ஒதுக்கீடு செய்யப்படும்.

3. தடுப்பூசி போட்ட பிறகு ஏதாவது சிறு பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை உறுதி செய்ய ஒவ்வொருவரும் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

4. மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாவட்டந்தோறும் ஒரே நிறுவன தடுப்பூசி மட்டுமே வழங்கப்படும். ஒரே மாவட்டத்திற்குள் இரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தடுப்பூசி கலக்க அனுமதிக்கப்படாது.

5. தடுப்பூசி குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள்

6. ஒரு நாளைக்கு 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போட திட்டம் உள்ளது

7. தடுப்பூசி மையங்களில், மூன்று தனித்தனி அறைகள் இருக்கும் - ஒன்று காத்திருப்பு அறை. ஒன்று கண்காணிப்பு அறை. மற்றும் ஒரு அறை தடுப்பூசிக்கு ஒதுக்கப்படும். கூட்டம் சேராமல் சமூக விலகல் தூரத்தை உறுதிப்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+