உ.பி. பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம்.. வாடகைக்கு வீடு எடுத்து அசிங்கம்.. சிக்கியது எப்படி?
டெல்லி: ஐஏஎஸ் வந்தனா திரிபாதி, தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த வேளையில் அங்கு அடிக்கடி இளம் ஆண்கள் வந்து போவதாகவும், விபச்சாரம் நடப்பதாகவும் உள்ளூர் மக்கள் போலீசிடம் கூறினார்கள்.இதன்பேரில் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ்ஜில் உள்ள கைட்கஞ்ச் பகுதியில், போலீசார் திடீரென சோதனை நடத்தினர், அப்போது 4 இளம் பெண்களையும் மற்றும் 5 இளைஞர்களையும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் கைது செய்திருக்கிறார்கள். எப்படி இந்த கும்பல் சிக்கியது என்பதை பார்ப்போம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் (பழைய அயோத்தி) நியூ பஸ்தி கிட்கஞ்ச் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி வந்தனா திரிபாதி என்பவருக்கு சொந்தமாக இரண்டு அடுக்கு வீடு இருக்கிறது. இந்த வீட்டை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சர்வேஷ் திவேதி என்பவர் மாதம் 15,000 ரூபாய் வாடகைக்கு எடுத்திருக்கிறார். இவர் தனது குடும்பத்துடன் தங்குவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு சட்டவிரோதமாக விபச்சார தொழிலை எந்த சந்தேகமும் வராத அளவிற்கு நடத்தி வந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அந்த வீட்டிற்கு இரவு நேரங்களில் இளம்பெண்களும், இளைஞர்களும் அடிக்கடி வந்து செல்வதை கவனித்த அக்கம்பக்கத்தினர், சந்தேகமடைந்து விபச்சாரம் நடப்பதாக குற்றச்சாட்டி கிட்கஞ்ச் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
கதவை உடைத்த போலீசார்
தகவலின் பேரில் பிரயாக்ராஜ் நகர ஏசிபி ராஜீவ் யாதவ் மற்றும் ஆய்வாளர் வீரேந்திர சிங் தலைமையிலான போலீசார் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிற்பகலில் அந்த வீட்டைச் சூழ்ந்தார்கள். போலீசாரைப் பார்த்ததும் உள்ளே இருந்தவர்கள் கதவை பூட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டார்கள். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே அதிரடியாகப் புகுந்தனர்.
வீட்டிற்குள் வெவ்வேறு அறைகளில் இளம்பெண்களும், இளைஞர்களும் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமான நிலையில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து ஏராளமான காண்டம் மற்றும் அரைகுறை ஆடைகள் மற்றும் தடயங்களை போலீசார் கைப்பற்றினர்.
இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் கைது
இந்தச் சோதனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், வாரணாசியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் பிரயாக்ராஜைச் சேர்ந்த இரண்டு பெண்கள் என மொத்தம் 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், இந்தத் தொழிலை நடத்தி வந்த மூளையாகச் செயல்பட்ட சர்வேஷ் திவேதி மற்றும் மயங்க் குஷ்வாஹா (19), அனுஜ் மிஸ்ரா (23), சைஃபுல் சித்திக் (23), அதுல் குமார் (35) ஆகிய 5 ஆண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஃபேஸ்புக் மூலம் வலை
கைது செய்யப்பட்ட இளம்பெண்களில் ஒருவர் போலீசாரிடம் கூறுகையில், ஃபேஸ்புக் மூலமாக இந்த கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே தான் பிரயாக்ராஜ் வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.
அதிர்ச்சியில் மக்கள்
அப்பகுதி மக்கள் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரி வந்தனா திரிபாதி மற்றும் ஐஇஆர்எஸ் அதிகாரி அமிதாப் சர்மா ஆகியோரிடமிருந்து இந்த வீடு வாடகைக்கு எடுத்துள்ளார்கள். குடும்பத்துடன் தங்குவதாகக் கூறிவிட்டு இப்படி அசிங்கமான செயல்களில் ஈடுபட்டிருப்பது கேவலமாக இருக்கிறது" என்றார்கள். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த நெட்வொர்க்கில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications