டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அசத்தல்.. கொரோனா சிகிச்சைக்கு மருந்து இதுதான்.. பரிந்துரைத்த இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குழு

Google Oneindia Tamil News

டெல்லி: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்தை கொரோனா நோயை குணப்படுத்த வழங்கலாம் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசரகால குழு பரிந்துரை செய்துள்ளது.

Recommended Video

    ஒரே ஆறுதல்... தமிழ்நாட்டில் இன்னும் ஸ்டேஜ் 1 தான்

    கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்தை வழங்கலாம் என்று, ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி, தேசிய அவசரகால குழுவை அமைத்து ஆய்வு செய்தது.

    இந்த நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசரகால குழு பரிந்துரை செய்துள்ளது.

    நாடு முழுக்க 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய அனுமதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா? நாடு முழுக்க 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய அனுமதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

    ஜோர்டான்

    ஜோர்டான்

    இதே மருந்தை அமெரிக்கா, ஜோர்டான் ஆகிய நாடுகளும் ஏற்கனவே பரிந்துரை செய்தது. மலேரியா நோயை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தக் கூடியது தான் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்து. அதை கொரோனா வைரஸ் பாதிப்பு பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    எல்லோருக்கும் இல்லை

    எல்லோருக்கும் இல்லை

    அதுவும் மோசமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதாவது, அதிகமான பாதிப்பு உள்ளவர்களுக்கு இதைக் கொடுக்கலாம் என்றும் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றும் வீடுகளில் COVID-19 நோயாளிகளைப் பராமரிக்கும் நபர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெளிவுபடுத்தியது.
    பொதுப் பயன்பாடு இல்லை

    பொதுப் பயன்பாடு இல்லை

    "அவசரகால சூழ்நிலைகளில் தடைசெய்யப்பட்ட பயன்பாடு" என்பதற்காக இந்த நடைமுறையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) சரி செய்துள்ளது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பரிந்துரை அதிக ஆபத்துள்ள நோய்க்கூறு உள்ளவர்களுக்கு மட்டுமே, பொதுவான பயன்பாட்டிற்கு அல்ல, ஒருவர் சுயமாக மாத்திரை வாங்கி சாப்பிடக் கூடாது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், நோய் தடுப்புக்கு மட்டுமே என்று ஐ.சி.எம்.ஆர் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    டொனால்ட் ட்ரம்ப்

    "ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் & அஜித்ரோமைசின் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, எடுத்துக்கொண்டால், மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் உண்மையான வாய்ப்பு உள்ளது" என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில், கொரோனா வைரசுக்கான சிகிச்சை பற்றி ட்வீட் செய்திருந்தது நினைவிருக்கலாம்.

    மருத்துவர்கள் கருத்து

    மருத்துவர்கள் கருத்து

    இதுகுறித்து சில மருத்துவர்களிடம் கேட்டபோது, காய்ச்சல் மாத்திரை, அல்லது, விட்டமின் மாத்திரைகள் போல அனைவரும் வாங்கி இதை சாப்பிட்டு விட வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஏனெனில் இது ஈரல் உள்ளிட்டவற்றில் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். அவசியம் ஏற்படும் நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் இதை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும், இந்த மாத்திரை எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    The National Task Force for COVID19 constituted by Indian Council of Medical Research recommends the use of hydroxychloroquine for treatment of COVID19 for high-risk cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X