‛நானே விராட் கோலியின் ரசிகன் தான்’.. ஏன் தெரியுமா? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய நச் பதில்! செம

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான் விராட் கோலியின் ரசிகன் தான் என தனியார் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் அதன் பின்னணி காரணத்தை அவர் கூறியபோது அனைத்து மக்களுக்கும் கைத்தட்டி சிரித்து ஆரவாரம் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெய்சங்கர். தற்போது பல நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவுடனான அந்த நாடுகளில் உறவை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

I am a fan of Virat Kohli: Why Union Minister Jaishankar says with laugh this? details here

அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ரன் மெஷினுமான விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானும் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ரசிகன் என தெரிவித்துள்ளார்.

அதாவது டெல்லியில் ரோட்டரி ரைஸ் இன்டர்ராக் ஷன் வித் டெலிகேட்ஸ் என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிற நாடுகள் உடனான உறவு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது தான் ‛‛நான் விராட் கோலியின் ரசிகன்'' என தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ நான் விராட் கோலியின் ரசிகன். நான் அவரை மிகவும் ரசிக்கிறேன். ஏனென்றால் என்னை பொறுத்தவரை அரசியல், இருநாடுகளுக்கு இடையோன உறவை பேணிக்காப்பது என்பது மிகவும் சவால் நிறைந்தது. அதேபோல் விராட் கோலி விளையாட்டில் பல சவால்களை எதிர்கொண்டு சாதிக்கிறார். அது அவருக்கே உரித்த குணமாக இருக்கிறது.

போட்டிகளில் பின்னடைவை சந்திக்கும்போது அதில் இருந்து விராட் கோலி மீண்டு வருகிறார். இதனை பலமுறை உலகம் கண்டுள்ளது. நெருக்கடிகளை சமாளித்து விராட் கோலி உயர்ந்து நிற்கிறார். பொதுவாக சர்வதேச விவகாரங்களை கையாளும் தலைவர்களின் குணத்தை கிரிக்கெட்டில் விராட் கோலி பிரதிபலிக்கிறார். இதனால் விராட் கோலி பிடிக்கும்'' என்றார்.

மேலும் அண்டை நாடுகள் உடனான உறவுகளில் இருக்கும் சிக்கல்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜெய்சங்கர், ‛‛சில அண்டை நாடுகளுடன் பிரச்சனை இருப்பதை நான் நன்கு புரிந்து வைத்துள்ளேன். இதில் பாகிஸ்தான் என்பது விதிவிலக்கு. தற்போதைய சூழலில் நம் அண்டை நாடுகள் இந்தியா உடன் நல்ல அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்தியா பற்றி நல்ல விதமாக பேசுகின்றன. இருப்பினும் அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு இருப்பது என்பது இயற்கையான ஒன்று தான். இதனால் அண்டை நாட்டினர் அனைத்து விஷயங்களுடன் நம்முடன் உடன்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியும்.

மேலும் சீனாவை எடுத்து கொண்டால் தற்போது இருக்கும் நிலையான உறவு போல் இதற்கு முன்பு இருந்ததாக நினைக்கவில்லை. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இதில் வித்தியாசமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலை என்பது நம்மால் ஏற்படவில்லை. மாறாக எல்லை தொடர்பான ஒப்பந்தத்தை அவர்கள் கடைப்பிடிக்காததால் ஏற்பட்ட விளைவாக உள்ளது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள நாம் அச்சப்பட கூடாது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+