Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நானும் ஒரு தமிழன்தான்'.. நாடாளுமன்றத்தில் நிருபரிடம் 'நச்சென' கூறிய ராகுல் காந்தி.. செம வீடியோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ''நானும் தமிழன் தானே'' என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதில் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவரை தமிழக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

    பாஜகவால் ஒரு காலத்திலும் தமிழ்நாட்டை ஆளவே முடியாது - Rahul Gandhi

    நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு வரவேற்பு, எதிர்ப்பு என்று கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    விளாசி தள்ளிய ராகுல்காந்தி

    விளாசி தள்ளிய ராகுல்காந்தி

    எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ''இது ஒன்றுமில்லாத பூஜ்ஜிய பட்ஜெட் '' என்று நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தாக்கினார். இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.
    ''மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும்''. ''பாஜக மாநிலங்களின் குரலை ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது'' என்று விளாசினார்.

    பாஜக ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது

    பாஜக ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது

    ''நீங்கள் இரண்டு இந்தியாவை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று பிரித்து வைத்திருக்கிறீர்கள்'' என்று குற்றம்சாட்டினார். மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது பற்றி அதிகமாக பேசிய ராகுல் காந்தி, '' இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை . தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை. உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு போதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது'' என்று கடுமையாக பேசினார்.

     ''நானும் தமிழன் தானே''

    ''நானும் தமிழன் தானே''

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு தமிழக எம்.பி.க்கள் கடும் வரவேற்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தைவிட்டுவெளியே செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிருபர் ஒருவர் ராகுல்காந்தியிடம் ''நீங்கள் தமிழ்நாடு பத்தி அதிகமா பேசறீங்க'' என்று ஹந்தியில் கூற, அதற்கு ராகுல் காந்தி ''நானும் தமிழன் ஒரு தானே'' என்று ஹிந்தியில் பதில் கூறியபடியே நடந்து சென்றார்.

     எப்போதும் தமிழை விட்டு கொடுக்காதவர்

    எப்போதும் தமிழை விட்டு கொடுக்காதவர்

    இந்த பதிலை கேட்டதும் அந்த நிருபரும், அங்கு இருந்தவர்களும் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். நிருபர் கேட்பதும், அதற்கு ராகுல்காந்தி பதில் அளிப்பதுமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ''ராகுல் காந்தி எப்போதும் தமிழை விட்டு கொடுக்காதவர்'' என்று தமிழக நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+