"மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் இல்லை" ராகுல் காந்தி ஆவேசம்!
டெல்லி: ஜனநாயகம் குறித்து பேசியதற்காகவும் அவதூறு வழக்கு தொடர்பாகவும் மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து பேசிய கருத்து சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி
ராகுல் காந்தியின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதாகவும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அந்த உறுப்பினரின் மக்கள் பிரதிநிதி பொறுப்பு பறிக்கப்படும். அந்த அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி
அதோடு வயநாடு தொகுதி காலி எனவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறை தண்டனை மற்றும் அதை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவதூறு வழக்கில் தனக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக சாடினார்.

எனது பெயர் சாவர்க்கர் இல்லை
அப்போது ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கூறுவது பற்றி செய்தியாளர்கள் அவரிடம் (ராகுல் காந்தி) கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி , "ஜனநாயகம் குறித்து பேசியதற்காகவும் அவதூறு வழக்கு தொடர்பாகவும் மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். எனது பெயர் சாவர்க்கர் இல்லை என்றும் நான் காந்தி.. மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று ஆவேசமாக கூறினார். இந்துத்வா சித்தாந்தவாதியான சாவர்க்கர் ஆங்கிலேயேரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி பேசி வருகிறார்.

பாஜக அச்சம்
தொடர்து பேசிய ராகுல் காந்தி, நான் அடுத்து என்ன பேசப்போகிறேனோ என்பதைக் கண்டு பிரதமர் மோடி அச்சம் அடைந்து இருப்பதாகவும் அதனால்தான் தகுதி நீக்க்கம் செய்யப்பட்டதாகவும் கூறினார். எனக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவே இருக்கும். வயநாடு தொகுதி மக்கள் என் குடும்பத்தை போன்றவர்கள். தகுதி நீக்கம் குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதுவேன்.

இந்த தேசத்திற்காக..
பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசுதான். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும் நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருப்பேன். நான் நாடாளுமன்றத்திற்குள் இருக்கிறேனோ.. இல்லையா.. என்பது முக்கியம் இல்லை. இந்த தேசத்திற்காக நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவின் உடனடி ரீப்ளே
இதற்கிடையே ராகுல் காந்தியின் பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள பாஜக, பிரதமர் மோடியின் பெயர் குறித்து பேசும் போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ராகுல் காந்தி இழிவு படுத்தி விட்டதாகவும் ராகுல் காந்தி மட்டும் இல்லை. 32 தலைவர்கள் இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், பாஜகவில் இருந்தே ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய பாஜக, கர்நாடக தேர்தலுக்காக ராகுல் காந்தியை பாதிக்கப்பட்ட நபராக முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக விமர்சித்துள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications