டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கு ட்விட்டர்ல அக்கவுண்ட்டே இல்லை.. ஆள விடுங்க சாமி - ஜேஎன்யூ துணைவேந்தர் பல்டி!

By
Google Oneindia Tamil News

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி ஸ்ரீ பண்டிட் மீது புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து தனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ஜெகதீஷ் குமார். இவர் தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த ஹிஜாப் விவகாரம்.. பதற்றம்.. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை விஸ்வரூபம் எடுத்த ஹிஜாப் விவகாரம்.. பதற்றம்.. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை

இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றிவந்த சாந்தி ஸ்ரீ துலிபுடி பண்டிட், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்ற செய்தியை சமூக ஊடகங்கள் கொண்டாடி வந்தது. இந்த நிலையில், சாந்தி ஸ்ரீ பண்டிட் இதற்கு முன் ட்விட்டரில் பதிவிட்ட‌ பதிவுகளால் சர்ச்சையில் சிக்கினார். அந்தப் பதிவுகள் சர்ச்சையானதும், அந்த‌ ட்விட்டர் கணக்கு மூடிப்பட்டது. ஆனால், சாந்தி ஸ்ரீ பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளின் ஸ்கீர்ன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

சர்ச்சை

சர்ச்சை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இத்தாலியின் ரிமோட் கண்ட்ர்ரொல்ல் என்றுள்ளார். முஸ்லிம்களின் லவ் ஜிகாத் பயங்கரவாதம் என்ற கோணத்திலும் ட்வீட் செய்துள்ளார். கிறிஸ்தவர்களை அரிசி மூட்டைக்காக மதம் மாறியவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜேஎன்யூ, ஜாமியா கல்லூரி மாணவர்கள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார் சாந்தி ஸ்ரீ பண்டிட். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இத்தாலியின் ரிமோட் கண்ட்ர்ரொல்ல் என்றுள்ளார். முஸ்லிம்களின் லவ் ஜிகாத் பயங்கரவாதம் என்ற கோணத்திலும் ட்வீட் செய்துள்ளார். கிறிஸ்தவர்களை அரிசி மூட்டைக்காக மதம் மாறியவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜேஎன்யூ, ஜாமியா கல்லூரி மாணவர்கள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார் சாந்தி ஸ்ரீ பண்டிட்.

வருண் காந்தி

வருண் காந்தி

இந்த சர்ச்சைக்கு இடையில்தான் அவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசுக்கு ஆதரவாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் பேசியவரை நாட்டின் முக்கிய கல்வி நிலையத்தின் தலைவராக செயல்பட அனுமதிக்கலாமா என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். அதேநேரம் சாந்தி ஸ்ரீ தன்னை துணைவேந்தராக நியமித்ததற்கு, பிரதமருக்கும் உயர்கல்வித்துறைக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதை பாஜக எம்.பி வருண் காந்தி ட்விட்டரில் பகிர்ந்து, பிழையோடு கடிதம் எழுதுபவரை துணைவேந்தராக நியமித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சாந்தி ஸ்ரீ பதில்

சாந்தி ஸ்ரீ பதில்

டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டதில் இருந்தே, சாந்தி ஸ்ரீ பண்டிட்டை சர்ச்சைகள் தொடர்ந்துவருகின்றன. இந்நிலையில், சர்ச்சையான ட்வீட் குறித்து தற்போது ஊடகத்துக்கு பதிலளித்துள்ளார் சாந்தி ஸ்ரீ. ''எனக்கு ட்விட்டர் கணக்கே கிடையாது. நான் சமூக வலைதளங்களில் அவ்வளவு ஆக்டிவ் கிடையாது. அந்த ட்விட்டர் கணக்கு என்னுடையது போல உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்

துணைவேந்தர்

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பி.ஏ., வரலாறு மற்றும் சமூக உளவியல் மற்றும் எம்.ஏ., முதுகலை அரசியல் அறிவியல் பட்டங்களைப் பெற்றவர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். மகாராஷ்டிராவில் உள்ள சாவித்திரிபாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த‌ சாந்திஸ்ரீ பண்டிட் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

English summary
Santishree Dhulipudi Pandit, who was appointed as Jawaharlal Nehru University (JNU) vice-chancellor on Monday, has denied having a Twitter account amid controversy over tweets allegedly posted from an account named after her. 4
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X