கூட்டணி வைக்க கூட வரவில்லை.. எல்லா காயமும் எதையாவது கற்றுக்கொடுக்கிறது! ராகுல் காந்தி உருக்கம்
டெல்லி: ‛‛நாட்டில் இருந்து தினமும் அதிக அன்பை பெறும் வேளையில் ஏராளமான வெறுப்பையும் பெறுகிறேன். எனக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் எதையாவது கற்றுக்கொடுத்து வருகிறது'' என காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பேசினார்.
உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. மற்ற 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதனால் காங்கிரஸ் கட்சி மீது ஜி23 அதிருப்தி தலைவர்கள் விமர்சனங்களை அள்ளி வீசினர். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை அவர்கள் வசைப்பாடினர்.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்
இந்நிலையில் தான் நடைபெற உள்ள பிற மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கவனமாக செயல்பட துவங்கி உள்ளது. ஒவ்வொரு மாநில தலைவர்களையும் கட்சி மேலிடம் அழைத்து பேசி வருகிறது. ராகுல்காந்தியும் பிற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய துவங்கியுள்ளார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது குறித்து ஆலோசிப்பதாக ராகுல்காந்தி நேற்று கூறினார்.

ராகுல் பேச்சு
இந்நிலையில் இன்று டெல்லியில் ‛The Dalit Truth' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சனம் செய்தார். மேலும் உருக்கமாகவும் பேசிய ராகுல், உத்தர பிரதேச மாநில தேர்தல் தோல்வி குறித்தும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பேசியதாவது:

அதிகாரத்தை தேடும் அரசியல்வாதிகள்
நாம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பை காப்பாற்ற நாம் நமது அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்க வே்ண்டும். ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களும் ஆர்எஸ்எஸ் கைகளில் உள்ளது. நாட்டில் அதிகாரத்தை தேடி அலையும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் காலையில் எழுந்தவுடன் எப்படி அதிகாரத்தை பெறலாம் என்று நினைக்கிறார்கள். அதை நாள் முழுவதும் யோசித்து அதை அடைய முயற்சிக்கிறார்கள். பின்னர் தூங்குகிறார்கள். இப்படி சுழற்சி வாழ்க்கையை சிலர் வாழ்கிறார்கள்.

அதிகாரம் செய்ய ஆசையில்லை
நான் அதிகார மையமாக இருந்த குடும்பத்தில் பிறந்தேன். ஆனால் உண்மையில் அதிகாரம் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு துளியும் ஆசையில்லை. இதற்கு பதிலாக நான் நாட்டை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இரவில் தூங்கும்போது நான் தேசத்தை புரிந்துகொள்ள முயல்கிறேன்.

கற்றுக்கொடுக்கும் காயங்கள்
ஒரு காதலன் காதலியை புரிந்த கொள்ள நினைப்பது போல் நாட்டை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நீங்கள் ஒன்றை நேசிக்கும்போது அதை புரிந்து கொள்ள நிச்சயமாக முயற்சி செய்வீர்கள். அதை தான் நானும் செய்கிறேன். நான் நாட்டில் இருந்து ஏராளமான அன்பையும் பெற்றேன். வெறுப்புகளையும் சம்பாதித்தேன் எனக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் எதையாவது கற்றுக்கொடுத்து வருகிறது.

பதிலளிக்காத மாயாவதி
உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவை எதிர்த்து மாயாவதி போட்டியிடவில்லை. கூட்டணி அமைக்கலாம், முதல் அமைச்சர் வேட்பாளராக இருங்கள் என மாயாவதிக்கு நாங்கள் செய்தி அனுப்பினோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. இந்த முறை அவர் ஆதிதிராவிடர் மக்களுக்காக குரல் கொடுத்து போராடவில்லை. ஏனெனில் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளின் நடவடிக்கைக்கு பயந்தார். இப்படிதான் பாஜக அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. இதுதான் உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பாதித்தது'' என்றார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications