"இட்லி-சாம்பார், மஞ்சள், டீ.." இந்தியர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றியதே இவைதானாம்.. வாவ்
டெல்லி: மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாகவே பதிவானது. இதனிடையே இதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் 3 கொரோனா அலைகள் ஏற்பட்ட நிலையில், அதில் 2ஆவது கொரோனா அலை மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் இப்போது வரை மொத்தம் 531,152 பேர் கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021இல் இரண்டாம் அலை சமயத்தில் தான் கொரோனா பாதிப்பும் சரி உயிரிழப்புகளும் சரி உச்சத்தில் இருந்தது.
அந்த காலகட்டத்தில் மட்டும் கிட்டதட்ட ஒரு லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவானது. இது ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் கிட்டதட்ட 5இல் ஒரு பங்காகும். அப்போது ஆக்ஸிசன் கொரோனா படுக்கைகள், மருந்துகள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவியது. நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பு எந்தளவுக்கு உள்ளது என்பதைக் காட்டிவிட்டது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்தியாவில் அதிக கொரோனா உயிரிழப்புகள் பதிவானது போல தெரிந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா உயிரிழப்புகள் வெகுவாகவே குறைந்துள்ளது. உயிரிழப்புகள் குறைய நமது இந்திய உணவு முறையே காரணம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து பிரேசில், ஜோர்டான், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர்.
இது குறித்த ஆய்வு முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இதழான இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காற்றில் பரவும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போதும் அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த இந்தியாவில் பதிவான கொரோனா உயிரிழப்புகள் என்பது மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 5 முதல் 8 மடங்கு குறைவாகவே உள்ளதாக அகில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் கொரோனா தீவிரத்தன்மைய மற்றும் மேற்கத்திய மற்றும் இந்திய மக்களின் உணவுப் பழக்கங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். இப்போது அவர்கள், "இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்திய உணவுப் பழக்கத்தின் பங்கு" என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா தீவித்தன்மை மற்றும் உயிரிழப்புகள் குறைந்ததில் உணவுப் பழக்கம், வேக்சின் உள்ளிட்டவற்றுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்கு இருப்பதை அவர்கள் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, க்ரீஸ், ஸ்பெயின் நாடுகளில் பதிவான கொரோனா உயிரிழப்புகள் மற்றும் இந்த நான்கு நாடுகளில் முக்கிய உணவுகள் குறித்த தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்துள்ளனர். காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, பால் பொருட்கள், மீன், ஆல்கஹால், காபி, பழங்கள், நட்ஸ்கள், தேநீர் மற்றும் மஞ்சள் ஆகியவை முக்கியமாக இருந்தது. இந்தியர்களின் தனித்துவமான உணவுப் பழக்கங்கள் கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளது தெரிய வந்தது.
இந்தியர்களுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டினர் 10-20 மடங்கு சிவப்பு இறைச்சி, எட்டு-12 மடங்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஐந்து-ஏழு மடங்கு அதிக பால் பொருட்கள், மூன்று-எட்டு மடங்கு அதிக மீன், 10-12 மடங்கு அதிக காபி, இரண்டு மடங்கு அதிகம் மது எடுத்துக் கொள்வது தெரிய வந்தது. அதேநேரம் இந்தியர்கள், மேற்கத்திய மக்களை விடப் பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்களை நான்கு மடங்கு அதிகம் உட்கொள்கிறார்கள்.
மேற்கத்திய மக்கள் அதிகமாகக் காபி மற்றும் மது அருந்துவதால், அது ரத்தத்தில் இருக்கும் இரும்பு, துத்தநாகம் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை மாற்றி கொரோனா உயிரிழப்புகளை அதிகரித்திருக்கலாம். வெளிநாட்டின் டீ மற்றும் மஞ்சளை மிக மிகக் குறைந்த அளவுக்கே எடுத்துக் கொள்கிறார்கள், அதேநேரம் இந்தியர்கள் 1.2 கிராம் தேநீர் மற்றும் 2.5 கிராம் மஞ்சள் எடுத்துக் கொள்வது கூட இந்தியர்களைக் காப்பாற்றியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்தையும்விட தென்னிந்திய உணவான இட்லி-சாம்பாரும் வட இந்திய உணவான ராஜ்மா-அரிசி ஆகியவை தான் முக்கியமாக கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்களுக்கு வெற்றிபெற உதவியது. இந்திய உணவுகளான இட்லி-சாம்பார், ராஜ்மா சாதம், பருப்பு வகைகள் அதிக இரும்பு மற்றும் ஜின்க் சத்தை இந்தியர்களுக்கு அளித்துள்ளது
பொதுவாக ஒரு இட்டிலியில் வைட்டமின் மாத்திரைகளில் இருப்பதைப் போன்ற இரண்டு மடங்கு ஜின்க் இருக்கிறது. அதேபோல தேநீரில் இருக்கும் சில பொருட்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. அதேபோல இந்தியர்கள் தினசரி உணவில் 2.5 கிராம் மஞ்சளை பயன்படுத்துகிறார்கள். இதுவும் நமது உடலுக்குத் தேவையான பூஸ்டை தருகிறது.
இவை எல்லாம் சேர்த்துத் தான் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளை வெகுவாக குறைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், மேற்கத்திய மக்கள் அதிகம் சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிடுவது உணவில் சைட்டோகைனை அதிகப்படுத்துகிறது. இவை கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications