பாஜக உத்தரவிட்டால் சிபிஐ என்னை கைது செய்யும்: விசாரணைக்கு முன் வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாஜக உத்தரவிட்டால் சிபிஐ தம்மையும் கைது செய்யும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ முன் ஆஜரவாதற்கு சற்று முன்னர் வெளியிட்ட வீடியோவில் கெஜ்ரிவால் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை விவகாரம் ஆளும் ஆத்மி அரசுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வந்தது. இதன் மூலம் தனியார் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த மாற்றங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. இதனால் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.

If BJP has ordered CBI to arrest me: Delhi CM Arvind Kejriwal

புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் தனியாரிடம் இருந்து பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டது என்பது சிபிஐ, அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு. இது தொடர்பான விசாரணைகளில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தலைவர்கள் சிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று இன்று டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்காக ஆஜராக உள்ளார்.

If BJP has ordered CBI to arrest me: Delhi CM Arvind Kejriwal

இந்த விசாரணைக்கு முன்னர் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது, சிபிஐ இன்று என்னை விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்த விசாரணைக்காக நான் நிச்சயம் ஆஜராவேன். சிபிஐ அதிகாரம் மிக்கது. அவர்களால் யாரையும் சிறைக்கு அனுப்ப முடியும். பாஜக உத்தரவிட்டால் என்னையும் கைது செய்து சிபிஐ சிறைக்கு அனுப்பும். பாஜகவின் உத்தரவுகளைத்தான் சிபிஐ பின்பற்றுகிறது. இதுவெளிப்படையாகவே தெரிந்த ஒன்றுதான்.

நான் ஒரு ஊழல்வாதி என்கிறது பாஜக. வருமான வரித்துறையில் ஆணையராகப் பணிபுரிந்தவர். நான் நினைத்திருந்தால் பல கோடி ரூபாய் சம்பாதித்திருக்க வேண்டும். இந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஊழல்வாதி எனில் இந்த உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. இவ்வாறு அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+