பல லட்சம் கோடி! கேட்கவே கொதிக்குதே! இந்தியா பாகிஸ்தான் போரால் எந்தெந்த நாடுகள் பலன் அடையும் தெரியுமா
சென்னை: இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குச் சென்றால் அது சிறிய போராக இருந்தாலும் கூட.. பல முக்கிய நாடுகள் பல்வேறு மறைமுக வழிகளில் இதனால் பயன் அடையக்கூடும். முக்கியமாக நிதி ரீதியாக பயனடையக்கூடும். குறிப்பாக பாதுகாப்பு, மறுகட்டமைப்பு அல்லது உலகளாவிய மார்க்கெட்டை வைத்து வருமானம் பார்க்கும் அமெரிக்கா, துருக்கி மற்றும் சீனா அதிக அளவில் லாபம் ஈட்டக்கூடும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்!
அமெரிக்கா எப்படி ஆதாயம் அடையும்?
ஆயுத விற்பனை அதிகரிப்பு: அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் - லாக்ஹீட் மார்ட்டின், ரேதியோன், போயிங் போன்றவை அதிக பலன் அடையும். இதற்கான வரி மூலம் அமெரிக்க அரசும் பலன் அடையும். இந்தியாவிற்கும் அதிகரித்த ஆயுத விற்பனையைக் இவர்கள் மேற்கொள்வதால் பலன் அடையும்.
எண்ணெய் விலை லாபங்கள்: போர் பொதுவாக ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கிறது . இதனால் எண்ணெய் விலை உயர்வு ஏற்படும். இதனால் அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக ஷேல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
டாலர் பலம் அடையும்: இந்தியா பாகிஸ்தான் போரால் இந்திய, பாகிஸ்தான் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரை ஒரு பாதுகாப்பான புகலிடமாக பார்ப்பார்கள். இதனால் அதை நோக்கி ஓடுகிறார்கள். இதனால் டாலர் மதிப்பு உயரும்.

தொழில்நுட்ப உறவு: செயற்கைக்கோள், கண்காணிப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக, தொழில்நுட்ப வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவதற்காக இந்தியா அமெரிக்காவை நோக்கி செல்லும். இதன் மூலம் அமெரிக்கா டேட்டா பெற்று பலன் அடையும்.
போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு & ஆலோசனை: அமெரிக்க நிறுவனங்கள் மறுகட்டமைப்பு, இராணுவ தளவாடங்கள் மற்றும் மோதலுக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகளை பெற்று பலன் அடையும்.
துருக்கி எப்படி ஆதாயம் அடையும்?
பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு ஆயுதங்கள் ஏற்றுமதி: துருக்கி பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய ஆயுத சப்ளையர் (போர் ட்ரோன்கள், கடற்படை அமைப்புகள்). இந்த போர் துருக்கிய ராணுவ உபகரணங்களுக்கான தேவையை அதிகரிக்கக்கூடும். இதனால் அந்த நாட்டிற்கு வருமானம் கூடும்.
முதலீடு: பாகிஸ்தான் இந்தியா போர் துருக்கியின் புவிசார் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும். முக்கியமாக பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பெறும். முக்கியமாக ராணுவ ரீதியாக முதலீடுகளை அதிகரிக்கும். இது பாகிஸ்தான் நிதியை பாதிக்கும்.
பாதுகாப்பு ஒப்பந்தங்கள்: துருக்கி பாகிஸ்தான் அல்லது உலகின் பிற இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்யலாம். இதனால் பாகிஸ்தானுக்கு மேலும் இழப்பு ஏற்படும். துருக்கிக்கு ஜாக்பாட்தான்.
துருக்கி ராஜதந்திரம்: துருக்கிய அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் பெரும்பாலும் மோதல் மண்டலங்களில் உதவி, கட்டுமானம் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெறுவது வழக்கம். இதன் மூலம் அவர்களும் பலன் அடைவார்கள்
எண்ணெய் மற்றும் வர்த்தக வழித்தட மாற்றம்: பொதுவாக ஒரு போர் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கும். துருக்கி இதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதியை செய்து பலன் அடையும். முக்கியமாக கராச்சி போர்ட் பாதிக்கப்பட்டால் துருக்கி நேரடி பலன் அடையும்.
சீனா எப்படி ஆதாயம் அடையும்?
பாகிஸ்தானுக்கு ஆயுத மறுவிநியோகம்: சீனா பாகிஸ்தானின் மிகப்பெரிய பாதுகாப்பு விநியோக பங்காளி. போர் வந்தால் இராணுவ பொருட்கள் விற்பனையில் உடனடி அதிகரிப்பு (ட்ரோன்கள், ஏவுகணைகள், விமானங்கள்) ஏற்படும்.
கடன்: சீனா பாகிஸ்தானுக்கு அதிக கடன்கள் அல்லது ராணுவ உதவியை வழங்கலாம், உள்கட்டமைப்பு அல்லது பாதுகாப்பு உதவி என்று கூறி கடன் தந்து சிக்க வைக்கலாம்.
விநியோகச் சங்கிலி: இந்திய உற்பத்தி தடைபட்டால், உலகளாவிய உற்பத்தி சீனாவிற்கு மாறக்கூடும், குறிப்பாக மின்னணுவியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி சீனாவிற்கு செல்லும். இந்தியாவில் முதலீடு சரியும்.
பெல்ட் & சாலை விரிவாக்கம்: பாகிஸ்தானில் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு சீனாவின் BRI மூலம் நிதியளிக்கப்படலாம். பெல்ட் & சாலை விரிவாக்கம் மீண்டும் தொடங்கலாம்.
முதலீடு: போரால் ஏற்படும் சந்தை உறுதியற்ற தன்மை காரணமாக முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறலாம். அவற்றில் சில சீன சந்தைகளுக்கு திருப்பி விடப்படலாம்.
எவ்வளவு பலன்
இந்தியா-பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் ஆயுத விற்பனை, எரிசக்தி லாபம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவிற்கு ₹1-3 லட்சம் கோடி, துருக்கிக்கு ₹10,000-30,000 கோடி மற்றும் சீனாவிற்கு ₹1.5-2.5 லட்சம் கோடி வரை நிதி லாபம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications