ஆப்டிகல் இல்யூசன்: இங்கே 2 பூனைகள் இருக்கு.. உங்க கண்ணுக்கு தெரியுதா.. கண்டுபிடிச்சா நீங்க மாஸ் தான்
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஆப்டிகல் இல்யூசன் படத்தில் 2 பூனைகள் இருக்கிறது. ஆனால் ஒரு சதவீதத்தினரே இந்த படத்தில் இருக்கும் 2 பூனைகளையும் கண்டுபிடித்துள்ளனர். 2 பூனையும் உங்க கண்களுக்கு தெரிஞ்சா நீங்கள் மாஸ் தான்.
கண்களை குழப்பும் ஆப்டிகல் இல்யூசன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
புதிரான இந்த படங்கள் பார்ப்பவர்களை குழப்பம் அடைய செய்வதோடு, நமது கவனிக்கும் திறனை சோதித்து பார்க்கும் விதத்தில் இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
இதன் காரணமாக இத்தகைய படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து வருகின்றன. பல படங்களில் மறைந்திருக்கும் விஷயங்களை முதல் ஆளாக நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பலர் இது போன்ற அறிவினை சோதிக்கும் படங்களை விரும்பி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது டென்ஷனில் இருந்து விடுபட உதவும். அதன்படி தற்போது டிக் டாக் வீடியோவில் பகிரப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தைத்தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.

பூனைகள் மறைந்திருக்கிறது
இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படத்தில் 2 பூனைகள் மறைந்திருக்கிறதாம்... அதேபோல் இந்த 2 பூனைகளையும் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது என்றும் கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யும் படியும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக அவருக்கு கமெண்ட் செய்தவர்களில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே இதில் 2 உள்ள 2 பூனைகளையும் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார். சரி வாருங்கள் இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் பூனைகளை கண்டுபிடிப்போம்.

எங்கு இருக்கிறது
கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த புகைப்படத்தில், ஆண் நபர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு செய்தித்தாளை படித்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே உள்ள நாற்காலியில் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இதேபோல் தரையில் ஒரு பெண் குழந்தை அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. சரி டிக்டாக்கில் பதிவிட்ட அந்த நபர் கூறியபடி இந்த படத்தில் 2 பூனைகள் எங்கு மறைந்திருக்கிறது என்று பார்த்தால் முதலில் ஒரு பூனையையும் கண்டுபிடிக்க முடியாதது போலவே தெரிகிறது.

படத்தில் 2 பூனைகளைக் கண்டுபிடிக்க முடிந்ததா?
கண்கள் மற்றும் மூளையை சோதிக்கும் இத்தகைய புகைப்படத்தில் மறைந்திருக்கும் இந்த 2 பூனைகளையும் உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?.. கண்டுபிடித்தால் கிரேட் தான்... கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்.. அவை படத்தில் எங்கு உள்ளன என்பதை வாங்கள் பார்க்கலாம். சற்று உற்று பாருங்கள் ஒரு பூனை ஆண் நபர் காலுக்கடியில் சுருண்டு கிடப்பது தெரிகிறதா. சற்று மங்கலாக தெரிந்தாலும் நம் கண்களை மறைக்கும் விதமாக இப்படம் உள்ளது. சரி 2 வது பூனை பெண் ஒருவர் மடியில் வைத்து விளையாடுவது போல் இருக்கிறதே அது தான்...
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications