அட்றா சக்க! உதிரிபாகங்கள் இறக்குமதி வரி குறைப்பு.. செல்போன்கள் விலை குறைகிறதா? வெளியான தகவல்
டெல்லி: செல்போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் நாட்டில் செல்போன்கள் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறிய கருத்தை பார்க்கலாம்.
உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையாக நிலைநிறுத்திக் கொள்ள இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபடியாக செல்போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைத்துள்ளது. அதாவது பேட்டரி கவர், கேமரா லென்ஸ் உள்பட பிற பிளாஸ்டிக் மற்றும் மெடலில் உருவாக்கப்பட்ட மெக்கானிக் பொருட்கள் ஆகியவற்றிற்கான இறக்குமதி விலை 15 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இறக்குமதி குறைத்துள்ளதன் மூலம் ஆப்பிள் மற்றும் ஜியோமி ஆகிய செல்போன் நிறுவனங்களுக்கு பெரும் பயன்கள் கிடைக்கும் என்றுதெரிகிறது. பிற நாடுகளை விட இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாக செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்திய நிலையில், இந்த வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால், இந்தியாவில் செல்போன்கள் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது: இந்த நிலையில், பிரபல வரி ஆலோசனை நிறுவனமான மூர் சிங்கியின் இயக்குனர் ராஜத் மோகன் கூறும் போது, மொபைல் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது சர்வதேச உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் அதன் தயாரிப்பை விரிவுபடுத்த உதவும். அதேபோல், இந்தியாவில் இருந்து மொபைல் போன் ஏற்றுமதியும் கணிசமாக உயரும்" என்றார்.
மத்திய அரசின் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையை இந்திய செல்லுலர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) வரவேற்றுள்ளது. நாட்டில் செல்போன் உற்பத்தியின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது செல்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இரு மடங்கு ஆக உயர்ந்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 11.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது $15 பில்லியனாக அதிகரிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
3 - 5% வரை குறைய வாய்ப்பு: டிக்சான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் வச்சானி இது தொடர்பாக கூறுகையில், "மோட்டோரோலா, சாம்சங்க் மற்றும் ஜியோமி ஆகிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா கடும் போட்டி மிக்க நாடாக இந்த முடிவின் மூலம் மாறும்" என்றார். அதேபோல், கவுன்டர்பாயிண்ட் ரிசர்ஜ் சென்ற ஆய்வு நிறுவனம் கூறுகையில், 'இந்தியாவில் ஸ்மார்ட் துறையில் தேவையை அதிகரிப்பதுதான் இலக்கு என்றும், தற்போது வரி குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் செல்போன்கள் விலை 3 - 5% வரை குறைய வாய்ப்புள்ளதாக' கூறியுள்ளது.
எனினும், ஐடிசி (IDC) என்ற ஆய்வு நிறுவனம் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது. வரிக்குறைப்பு செல்போன் விலையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் ஆய்வு மேலாளர் உப்சனா ஜோஷி கூறுகையில், "சில பொருட்களின் விலை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரிக்குறைப்பின் பலன் நுகர்வோர்களுக்கு கிடைக்காமல் போகலாம்" என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications