இந்திராவின் அவசர நிலை பிரகடனம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை இருளில் மூழ்கடித்தது: துணை ஜனாதிபதி
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் செய்த அவசர நிலைப் பிரகடனமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை இருளில் மூழ்கடித்துவிட்டது என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய மின்னணு நிறுவனத்தி் பொன்விழா கொண்டாட்டங்களில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரித்ததோடு, அவர்களை புதிய இந்தியாவின் சிற்பிகள் என்று பாராட்டினார். நஷ்டத்தில் இயங்கிய இந்தப் பொதுத்துறை நிறுவனம், மினிரத்னா தகுதியுடையதாக தற்போது மாறியிருப்பதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

சூர்ய மின்சக்தி துறையில் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு தன்கர், புதுப்பிக்கவல்ல எரிசக்தி என்பது ஒரு மாற்று மட்டுமல்ல, அதுவே எதிர்காலம் என்றார். நீடிக்கவல்ல எரிசக்தி தீர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், பசுமையான, தூய்மையான இந்தியாவிற்கு மத்திய மின்னணு நிறுவனம் பங்களிப்பு செய்கிறது என்றார்.
முன்னதாக, இந்த நிறுவனத்தின் பொன்விழா இலச்சினையை வெளியிட்ட குடியரசு துணைத்தலைவர் பொன்விழா மண்டபத்தையும் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், துறையின் செயலாளரும், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என் கலைசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அவசர நிலை- ஓம்பிர்லாவுக்கு மோடி பாராட்டு: அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்காக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், அவசர நிலையை வன்மையாகக் கண்டித்துள்ள மக்களவைத் தலைவர், அந்த நேரத்தில் நடந்த அத்துமீறல்களையும், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட விதத்தையும் எடுத்துக்காட்டியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் மௌனம் அனுசரித்தது ஓர் அற்புதமான செயலாகும்.
50 ஆண்டுகளுக்கு முன் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும். ஏனெனில் அரசியல் சாசனம் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது, பொதுமக்களின் கருத்து நசுக்கப்பட்ட போது, நிறுவனங்கள் அழிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதற்கு இது ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ஆகும். அவசர நிலையின் போது நடந்த சம்பவங்கள் ஒரு சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் ஆகும் என பதிவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications