3 நீதிபதிகள் எதிர்ப்பு! ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் மறுத்துவிட்டது ஆனால் தன் பாலினத்தவர் உரிமைகளை நிலைநிறுத்த மத்திய அரசை நாடவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஆண் பெண் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். மற்றவை இயற்கைக்கு மாறான உறவாக வகைப்படுத்திவைத்திருந்தது மத்திய அரசு. இதேபோல் தன்பாலினத்தவர் திருமணம் என்பது இந்திய கலாசாரத்திற்கு எதிரானவை என்று கூறி அனைத்து மதத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர்.

இந்நிலையில் தன்பாலின தம்பதிகள், குழந்தைகளை ஒன்றாக வளர்க்கும் தன்பாலின தம்பதிகள், LGBTQ+ ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் என 21 பேர் உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், தன்பாலின தரப்பினர் வாதிடுகையில், திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் வாழ்க்கை. ஆனால் அது ஆணும் பெண்ணும் மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. காலப்போக்கில் மாறிவரும் திருமணம் குறித்த கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.நாங்கள் மரியாதையான திருமணத்தை விரும்புகிறோம்.
இந்திய அரசியலமைப்பு, அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை கொடுத்துள்ளது. பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. தன்பால் திருமணத்தை அங்கீகரிக்க மறுப்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும், தங்களை "இரண்டாம் தர குடிமக்கள்" ஆக்குகிறது என்றார்கள்.
மத்திய அரசு அளித்த பதில் வாதத்தில், இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளதா என்று மத்திய அரசு கேள்வியை எழுப்பியது. மேலும் இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தது. இந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் . திருமணம் என்பது ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே நடக்க முடியும் என்று தெரிவித்தது. இதேபோல் மதஅமைப்பினரும் கடுமையாக எதிர்த்தனர்
ஆனால் மத்திய அரசு மற்றும் மதத் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் முடிவு செய்தனர். அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கவேண்டும், கூட்டு வங்கிக் கணக்குகளைத் திறக்க அனுமதிப்பது, காப்பீடு எடுக்கும் போது ஒருவரை ஒருவர் நாமினியாக பரிந்துரைக்க அனுமதி வழங்குவது, கூட்டாக சொத்து வாங்குவது போன்ற உரிமைகள் வழங்க வேண்டும், குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கவேண்டும் என்று தன்பாலின தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேநேரம் இந்த உரிமைகள் வழங்கப்பட்டால். விவாகரத்து, தத்தெடுக்கும் உரிமை, வாரிசுரிமை, துணையை பராமரிப்பது போன்றசிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டி உள்ளதால் உச்ச நீதிமன்றம் இன்று என்ன தீர்ப்பு அளிக்க போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்கள் மீதான வழக்கில் 4 நீதிபதிகள் தனித்தனியே மாறுபட்ட தீர்ப்பினை வழங்குகிறார்கள். தன்பாலின ஈர்ப்பு நகர்புறத்தைச் சேர்ந்தது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 4 நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்புகளை வாசித்தார்கள்.
தலைமை நீதிபதி ஓய் சந்திரசூட், எஸ்கே கவுல், ரவீந்திர பட், நரசிம்மா ஆகிய நீதிபதிகள் தீர்ப்புகளை வாசித்தார்கள். திருமண சீர்திருத்தங்கள் என்பது சட்ட திருத்தங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், திருமணம் ஒரு நிலையான மற்றும் மாறாதது என்று சொல்வது தவறானது. சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டு செல்லும். சிறப்பு திருமணச் சட்டத்தின் ஆட்சியில் மாற்றம் தேவையா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் சட்டமியற்றும் துறைக்குள் நுழையாமல் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நீதிமன்றம் தன் பாலினத்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதில்லை மற்றும் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட முடியாது என்பதை அங்கீகரித்துள்ளது. தன் பாலினத்தவர்கள் (வினோதமானவர்கள்) உட்பட அனைத்து நபர்களும் தங்கள் வாழ்க்கையின் தார்மீக தரத்தை தீர்மானிக்க உரிமை உண்டு. ஒரு நபரின் பாலினம் அவர்களின் பாலினத்துடன் ஒன்றல்ல. பாலின நோக்குநிலையின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படக்கூடாது என்றே சமத்துவம் கோருகிறது. தன் பாலின இணையர்களால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது என்பதற்கான ஆதராப்பூர்வ தரவுகள் இல்லை. சதி, குழந்தை திருமணங்கள் முன்பு ஏற்கப்பட்டன. இப்போது சட்டத்திற்கு எதிரானது. அப்படி என்றால் திருமணம் மாறக்கூடியது. அதேநேரம் சிறப்பு திருமண சட்டத்தை ஏற்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும்" இவ்வாறு கூறினார்.
இதனிடையே நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர பாட் அளித்துள்ள தீர்ப்பில், ஓரினசேர்க்கை கிராமம், நகரத்திற்கு சொந்தமானது அல்ல என்று தலைமை நீதிபதி சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் அவர் கூறிய மற்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது., சட்ட பிரிவு 14 மற்றும் 15(3) மாற்றங்களை தேவைப்பட்டால் மட்டுமே சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகள் செய்வார்கள். அதேபோல் இந்த விவகாரத்திலும் சட்டம் இயற்றுபவர்களே நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
தன்பாலின பிரிவினர் வன்முறையை எதிர்கொள்வதில் இருந்து தடுப்பதில் மட்டுமே உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். திருமணம் என்பது சட்டம் சார்ந்தது இல்லை. திருமணம் என்பது சட்டம், அரசு அனைத்திற்கும் அப்பாற்பட்டது. அப்படி இருக்கும் போது இங்கே தன்பாலின திருமணத்திற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது. ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கான சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. இதில் , பல அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் அதை நாடாளுமன்றம்தான் இதை செய்ய வேண்டும்.
யாருக்கு வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் இந்த உரிமையை எல்லாம் நீதிமன்றம் சட்டமிக்கொண்டு இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் சட்டம் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது. ரோடு சரியில்லை என்று ஒருவர் வழக்கு போட்டால் ரோடு அடிப்படை உரிமை என்று நாம் சட்டம் இயற்ற முடியாது. அப்படித்தான் இதுவும். திருமண சட்டங்களில் சட்டம் உருவாக்க வேண்டும் என்று கோர்ட் இதற்கு முன் மத்திய அரசை வறுபுறுத்தவில்லையே.
இது போன்ற விவகாரங்களில் சட்டம் இயற்றுவது என்பது முடியாது. இந்த விவகாரத்தில் சிறப்பு திருமண சட்டத்தை கொண்டு வர முடியாது. அதில் இதை சேர்த்து சட்டம் இயற்றும்படி கூற முடியாது. அதேபோல் ஒருபாலின தம்பதியினர் குழந்தைகளை தத்து எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது., என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர பாட் தெரிவித்துள்ளார்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளுமே திருமணம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் . பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பில், ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர். ஓரினச்சேர்க்கை திருமணத்தை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தாக உள்ளது.மேலும் இந்த விவகாரத்தில் நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி ரவீந்திர பட்டின் கருத்துடன், நீதிபதி நரசிம்ஹாவும் உடன்படுவதாக கூறியிருக்கிறார்.எனவே 3 நீதிபதிகள் தன்பாலின திருமணத்திற்கு சட்டம் அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்துள்ளனர். நாடாளுமன்ற முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் முடிவு செய்ய முடியும் என்பது தீர்ப்பாக அமைந்துள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட, நீதிபதி எஸ்கே கவுல் ஆகியோர் queer ஜோடிகள் குழந்தையை தத்தெடுக்க உரிமை உண்டு என்று தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் நீதிபதிகள் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பிஸ் நரசிம்மா ஆகியோர் queer மற்றும் திருமணமாகாத ஜோடிகளின் தத்தெடுக்கும் உரிமைய மறுத்ததுடன் அதற்கான சட்ட திருத்த விதிமுறைகளையும் ஏற்கவில்லை. 5ல் 3 நீதிபதிகள் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளனர். தத்தெடுக்கும் உரிமையும் இல்லை என்று மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications