சிபிஐ நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு.. இன்று விசாரிப்பதில் சிக்கல்!

டெல்லி சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த சிபிஐ காவல் உத்தரவுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    INX Media Case: P Chidambaram is not cooperating says CBI

    டெல்லி: டெல்லி சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த சிபிஐ காவல் உத்தரவுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .

    In Media Case: P Chidambaram plea against CBI court order may not be filed today in SC

    முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஜாமீன் கோரிக்கை மனு மீதான விசாரணை இன்னும் சில நிமிடங்களில் உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரின் காவல் இன்றோடு முடிகிறது.

    இந்த ஐஎன்எக்ஸ் வழக்கில் இன்று மூன்று விதமான மனுக்களை ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஒரு மனு அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கூடாது என்று ப.சிதம்பரம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும்.

    அதேபோல் ப. சிதம்பரத்தை சிபிஐ மேலும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு வருகிறது. ப.சிதம்பரத்தை இனியும் காவலில் எடுக்க கூடாது, சிபிஐ காவலை நீட்டிக்க கூடாது, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று இரண்டாவது மனு சிதம்பரம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மூன்றாவது மனுதான் மிக முக்கியமானது. அதன்படி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ப. சிதம்பரத்தை காவலில் எடுக்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தவறானது என்று தள்ளுபடி செய்ய மூன்றாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதாவது ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதே தவறானது என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

    பொதுவாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த வழக்கை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. முதலில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில்தான் இதை மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் ப. சிதம்பரம் தரப்பு நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுதாக்கல் செய்துள்ளது.

    ''நீதி வழங்க வேண்டும்'' என்ற சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் இந்த மனுவை ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ளது. ஆனால் இதை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிப்பது சந்தேகம்தான் என்கிறார்கள். இதை இன்று விசாரணைக்கு இப்போது வரை பட்டியலிடவில்லை.

    இந்த மூன்றாவது மனுவை இன்று விசாரணைக்காக பட்டியலிடவில்லை என சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்படுமா என்று சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் கேட்டது.

    அது சமயம் சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை இன்று விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று சிபிஐ தரப்பும் வாதம் வைத்தது.

    இதையடுத்து நீதிபதி பானுமதி, தலைமை நீதிபதி உத்தரவு படியே வழக்குகள் பட்டியலிடப்படுகிறது. சிதம்பரத்தின் சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை இன்று பட்டியலிடுவது தொடர்பாக மீண்டும் பரிசீலனை செய்ய நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் முடிவு செய்த பின் வழக்கு விசாரிக்கப்படுமா என்று தெரிவிக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+